அப்படியே மொத்தமாக பிஎஸ்என்எல் பக்கம் தாவும் வாடிக்கையாளர்! ஒரே வாரத்தில் 2.75 லட்சம் பேர் சேர்ப்பு
டெல்லி: தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்திய கட்டண உயர்வை அறிவித்தன. இந்த கட்டண உயர்வு கடந்த ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், அதன் பிறகு அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி மக்கள் வருவது அதிகரித்துள்ளது.
நமது நாட்டில் டெலிகாம் துறை ரொம்பவே முக்கியமானது. இணையத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டெலிகாம் நிறுவனங்கள் தான் எடுத்துச் செல்கின்றன.

முன்பு டெலிகாம் துறையில் பல நிறுவனங்கள் இருந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இப்போது, ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதேபோல அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் உள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள்: இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தான் டெலிகாம் துறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் ஜியோ நிறுவனம் தனது கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. ஜியோவின் கட்டணங்கள் 12% முதல் 25% வரை உயர்த்தப்பட்டன. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடவோன் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தன. இந்த கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்த போதே பொதுமக்கள் பலரும் இதை எதிர்த்தன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பிற்கும் இது தொடர்பாகப் புகார்களை அளித்தனர். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகளாக டெலிகாம் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றும் கட்டண உயர்வுக்கு பிறகும் கூட உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தைக் கொண்ட நாடாக இந்தியாவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள்: இருப்பினும், பொதுமக்கள் இந்த கட்டண உயர்வால் மகிழ்ச்சியாக இல்லை. இதற்கிடையே விலை உயர்வு அமலுக்கு வந்த உடன் பொதுமக்கள் பலரும் அப்படியே பிஎஸ்என்எல் பக்கம் மாறி வருகிறார்களாம். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் சுமார் 27.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல்: மொபைல் நம்பரை மாற்றாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற போர்டிங் ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தியே பலரும் மற்ற டெலிகாம் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர்.
ஜூலை 3ம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்ததிலிருந்து மட்டும் சுமார் 2.50 லட்சம் பேர் மற்ற நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வந்துள்ளனர்.
தக்க வைக்க நடவடிக்கை தேவை: தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக மலிவு விலை திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தான் அதிகம் இருக்கிறது. இதன் காரணமாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேநேரம் இந்த வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது நெட்வொர்க் தரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், 4G கவரேஜை மேம்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications