மொபைலில் சார்ஜ் சீக்கிரம் காலி ஆகுதா? இதை மட்டும் பண்ணுங்க போதும்.. இனி பிரச்சினையே இருக்காது
சென்னை: இப்போது மொபைல்கள் இல்லாமல் நம்மால் எங்குமே வெளியே செல்லக் கூட முடியாது என்ற சூழல் இருக்கும் நிலையில், மொபைல் பேட்டரி சீக்கிரம் காலியாகாமல் அதை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது 11ஆவது விரலாகவே மொபைல் மாறிவிட்டது. இதனால் செல்போன் இல்லாமல் வெளியே செல்வதை நம்மால் இப்போதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

போட்டோ வீடியோ எடுப்பது முதல் அவகாசத்திற்குக் கால் செய்வது வரை வெளியே போகும் போது செல்போன் ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், மொபைல்களை பயன்படுத்தும் போது அதன் பேட்டரி நீடித்து இருப்பதில்லை என்ற புகார் இப்போது அதிகரித்துள்ளது.
பேட்டரி: இப்போது நாம் பணம் செலுத்தக் கூட பெரும்பாலும் செல்போனையே பயன்படுத்தும் நிலையில், வெளியே செல்லும் போது அது ஸ்விட்ச் ஆப் ஆனால் அது பெரும் பிரச்சினைதான்.. ஆனால், இனியும் உங்களுக்கு இந்த கவலை வேண்டாம். இந்த டிப்ஸ்களை நீங்கள் பாலோ செய்தால் உங்கள் மொபைல் பேட்டரி கணிசமாக அதிகரிக்கும்.
முதலில் உங்களை மொபைலை அப்டேட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். புதிதாக ஓஎஸ் அப்டேட் வந்தால் அதை அப்டேட் செய்ய வேண்டும். புது அப்டேட்களில் பேட்டரி பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான வசதிகள் இருக்கலாம். எனவே, புது அப்டேட்கள் வந்தால் தவறாமல் அதை அப்டேட் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே பேட்டரி சிக்கல் இருந்தால், அதையும் புது அப்டேட்டில் சரி செய்து இருப்பார்கள். எனவே, மொபைலை அப்டேட் செய்வதை மிஸ் செய்யாதீர்கள்.
இதுதான் ரொம்ப முக்கியம்: அடுத்து ஸ்கிரீன் பிரைட்னஸை குறைவாக வைக்கவும். பேட்டரி வேகமாகக் குறைய முக்கிய காரணமே ஸ்கிரீன் பிரைட்னஸ் தான். எனவே, ரூமுக்குள் இருக்கும் போது குறைந்த ஸ்கிரீன் பிரைட்னஸை வைத்துப் பயன்படுத்துங்கள். அதைக் காட்டிலும் auto-brightness வசதியைப் பயன்படுத்துங்கள். அது நாம் வெளியே இருக்கிறோமா, உள்ளே இருக்கிறோமா என்பதைப் பொறுத்து ஆட்டோமேடிக்காக ஸ்கிரீன் பிரைட்னஸ் அட்ஜெஸ்ட் ஆகிவிடும். இது பேட்டரி பயன்பாட்டை வெகுவாக குறைக்கும்.
மேலும், இப்போது கிட்டகட்ட அனைத்து மொபைல்களிலும் டார்க் மோட் என்று ஒரு வசதி இருக்கிறது. தற்போது இளைஞர்களுக்கு பெரும்பாலும் இந்த டார்க் மோட் தான் பிடிக்கிறது. பொதுவாக OLED திரைகளுடன் வரும் மொபைல்களில் இந்த டார்க் மோட் வசதி இருக்கிறது. அவை பேட்டரி பயன்பாட்டை சுமார் 10% வரை குறைக்கிறது. இதுவும் ஒரு நல்ல விஷயம்.
ஹீட் ஆகவே கூடாது: அடுத்து மொபைல்கள் ஹீட் ஆக விடக்கூடாது. பொதுவாக போன்கள் சூடாகும் போது அதன் பேட்டரி பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கிறது. மொபைல்களில் ஓவராக கேம் ஆடும் போது சூடாகி பேட்டரி பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. எனவே, அதை கவனத்தில் கொள்ளுங்கள். அதேபோல செல்போனை சார்ஜ் போட்டால் அது 100% வந்தவுடன் நிறுத்திவிடுங்கள். மொபைல் சார்ஜ் ஆன பிறகும் அப்படியே விட்டால் அதுவும் கூட நமது மொபைல் பேட்டரியை பாதிக்கும். இவை அனைத்தும் தான் மொபைல் பேட்டரியை சேமிக்கும் முக்கிய வழிகளாகும்.
இவை தவிர புஷ் நோட்டிபிக்ஷன்களை ஆப் செய்து வைப்பது, வைபை, ப்ளூடூத் வசதிகளை ஆப் செய்வதும் பேட்டரியை கணிசமாகக் குறைக்கும். இப்படிச் செய்வதால் 10,15 நிமிடங்கள் மட்டுமே பேட்டரி திறன் நீட்டிக்கும் என்றாலும் அவசர நேரத்தில் இந்த 10, 15 நிமிடங்கள் தான் ரொம்பவே முக்கியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications