பர்ஸை மறந்தாலும் பிரச்சனை இல்லை! மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை யூஸ் செய்யலாம்! இது தெரியாம போச்சே
டெல்லி: கிரெட்டிட் கார்டுகளை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்தாலும் கூட அதன் மூலம் பணம் செலுத்த ஒரு வழி இருக்கிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அவசரமாக வெளியே செல்லும் போது பர்ஸை மறந்து வைத்து சென்றுள்ளீர்களா.. இப்போது மொபைல் இருந்தால் கூகுள் பே மூலம் பணம் செலுத்தலாம் என்றாலும் கூட கிரெடிட் கார்டு தலைமுறைக்கு அது பெரியளவில் யூஸ் ஆகாது.

ஆனால், இந்த யுபிஐ செயலிகளை வைத்தே கிரெடிட் கார்டுகளில் பணம் அனுப்ப முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா.. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரூபே கார்டு: இப்போது உங்கள் ரூபே கார்ட்டை உங்கள் யுபிஐ கணக்குடன் இணைக்க முடியும். இதன் மூலம் பார்ஸை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டாலும் கூட மொபைல் இருந்தால் போதும் உங்கள் கார்ட் மூலம் பணத்தைச் செலுத்தலாம். என்னிடம் குறிப்பிட்ட வங்கி ரூபே கார்ட் மட்டுமே இருக்கிறது. அதை இணைக்க முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். அந்த கவலை வேண்டாம். எந்த வங்கியாக இருந்தாலும் சரி அந்த கிரெடிட் கார்டை உங்கள் யுபிஐ செயலியில் இணைக்கலாம்.
உங்களுக்கு மற்றொரு கேள்வி வரும். என்னிடம் கூகுள் பே இல்லை.. போன் பே தான் இருக்கிறது.. அதில் இணைக்கலாமா என்ற கேள்வி வரும். அந்த கவலையும் வேண்டாம். கூகுள், போன் பே மட்டுமின்றி கிட்டத்தட்ட அனைத்து யுபிஐ செயலிகளிலும் உங்களால் ரூபே கார்டை இணைக்க முடியும்.
சில நொடிகள் தான்: ரூபே கிரெடிட் கார்டுகளை யுபிஐ உடன் இணைப்பதும் கூட ரொம்பவே ஈஸி.. இதற்கு வெறும் சில நிமிடங்கள் மட்டுமே ஆகும், இதைச் செய்துவிட்டால் போதும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் ஆன்லைனிலும் சரி ஆஃப்லைனிலும் சரி உங்களால் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். ஷாப்பிங், பில் மற்றும் பொருட்களை வாங்கும் போது என எல்லா இடங்களிலும் இதைப் பயன்படுத்த முடியும். POS இயந்திரங்களிலும் கூட இந்த வழியாக யுபிஐ மூலம் கிரெடிட் கார்டில் இருந்து கட்டணம் செலுத்த முடியும்.
ரூபே கிரெடிட் கார்டுகளை இணைப்பது, அதன் மூலம் பேமெண்டுகளை எளிமையாக மேற்கொள்ள பல்வேறு வங்கிகளுடன் நேஷனல் பயமென்ட்ஸ் கார்பொரேஷன் ஆப் இந்தியா அமைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஒரு கண்டிஷன்: நீங்கள் வழக்கம் போல க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பே செய்தால் போதும். கார்டில் இருந்து பணம் செலுத்த முடியும். சரி, இந்த கிரெடிட் கார்டை எப்படி யுபிஐ உடன் இணைக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம். ஆனால், இதில் இருக்கும் ஒரு கண்டிஷன் ரூபே கிரெடிட் கார்டுகளை மட்டுமே உங்களால் பயன்படுத்த முடியும். மற்ற கார்டுகளை பயன்படுத்த முடியாது.
இணைப்பது எப்படி: முதலில் ஜீ பே, போன் பே உள்ளிட்ட எந்தவொரு யுபிஐ கணக்கையும் ஓபன் செய்யவும் அதில் உங்கள் ப்ரோபைல் இருக்கும் இடத்திற்குச் செல்லவும்.. அங்கே 'பேமெண்ட்' பேஜில் சென்று, 'ரூபே கிரெடிட் கார்டு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து எந்த வங்கியின் கிரெடிட் கார்டை நீங்கள் வைத்துள்ளீர்களோ, அதைத் தேர்வு செய்யவும்.
அடுத்த ஸ்டெப்பில் உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும். அது வெரிபை ஆகிவிட்டால், அதன் பிறகு ஈஸியாக நீங்கள் யுபிஐ மூலம் ரூபே கிரெடிட் காட்டை வைத்து ஈஸியீக பேமெண்டுகளை செய்ய முடியும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications