ஜியோ ரீசார்ஜ் உடன் இலவச நெட்ஃப்ளிக்ஸ் சந்தா.. 84 நாட்களுக்கு ஃப்ரீயா யூஸ் பண்ணலாம்.. என்ன பிளான்?
சென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தங்கள் யூசர்களுக்கு இலவச நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கும் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 2 பிளான்களிலும் 84 நாட்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் (பேசிக்) சந்தாவை இலவசமாக பெறலாம்.
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என்ற வகையில் ஏராளமான ரீசார்ஜ் திட்டங்களை மொபைல் போன் யூசர்களின் வசதிக்கு ஏற்ப வழங்கி வருகிறது. 130க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோ தனது 5ஜி சேவையை தற்போது விரிவுபடுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது கோடிக்கணக்கான யூசர்களின் வசதிக்கேற்ற வகையில் தினசரி, மாதாந்திர, 2 மாத, 3 மாத, வருடாந்திர என பல்வேறு கால வேலிடிட்டி பிளான்களையும், கூடுதல் பலன்களை வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வருகிறது. ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களுடன் OTT பிளாட்ஃபார்ம்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன்களையும் வழங்கி வருகிறது ஜியோ.
ஜியோ உடன் ஓடிடி இலவசம்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தாவுடன் ரூ.1,499 மற்றும் ரூ.4,199 மதிப்புள்ள இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ நிறுவனம் வழங்கி வந்தது. 1,499 ரூபாய்க்கு 3 மாத திட்டமும், 4,199க்கு 1 ஆண்டு திட்டமும் இருந்து வந்தது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடனான அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களையும் இப்போது ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக நெட்பிளிக்ஸ் உடன் புதிய பேக்கேஜ்கள் வழங்கப்படுகின்றன.
இலவச நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை வழங்கும் ஜியோவின் 2 ப்ரீபெய்ட் பிளான்களை பற்றி இங்கே நாம் பார்க்கலாம். ஜியோ நிறுவனம் தமது யூசர்களுக்கு இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன்களை வழங்க 2 ப்ரீபெய்ட் பிளான்களை கொண்டு வந்துள்ளது. இந்த 2 ப்ரீபெய்ட் பிளான்களின் விலைகள் ரூ.1499 மற்றும் ரூ.1099 ஆகும்.
இந்த 2 ப்ரீபெய்ட் பிளான்களும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டவை மற்றும் கூடுதல் கட்டணமின்றி OTT சப்ஸ்கிரிப்ஷனுடன் கால், டேட்டா, மெசேஜ் உள்ளிட்ட பலன்களை வழங்குகின்றன. ஜியோ யூசர்கள் இந்த 2 ப்ரீபெய்ட் பிளான்களில் ஏதாவது ஒரு பிளானை ரீசார்ஜ் செய்வதன் மூலம், எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழக்கமான மொபைல் நெட்வொர்க் சேவையுடன் நெட்ஃபிளிக்ஸில் இலவசமாக திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றைப் பார்த்து மகிழலாம்.
ஜியோ ரூ.1499 பிளான்: ஜியோவின் இந்த ரூ.1499 ப்ரீபெய்ட் பிளானில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படும். 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளான் மூலம் யூசர்கள் தினசரி 3 GB டேட்டாவை பெறுவார்கள். இந்த பிளானை ரீசார்ஜ் செய்வதன் மூலம் யூசர்கள் மொத்தமாக 252 GB ஹை-ஸ்பீட் டேட்டாவை பயன்படுத்தலாம். தினசரி டேட்டா லிமிட்டிற்கு பிறகு டேட்டா ஸ்பீட் 64 Kbps-ஆக குறைக்கப்படும்.

கூடுதலாக இந்த ரீசார்ஜ் பிளான் உடன் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் (ஜியோ சினிமா, ஜியோ டிவி, மற்றும் ஜியோ கிளவுட்) போன்ற OTT சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியாக ஒரு மாதத்திற்கான Netflix சப்ஸ்கிரிப்ஷனின் விலை ரூ.199 ஆகும். எனினும், ஜியோவில், 1,499 ரீசார்ஜ் பிளானை தேர்வு செய்தால் 84 நாட்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை இலவசமாக பெறலாம்.
ஜியோ ரூ.1099 பிளான்: ஜியோவின் 1,099 ரூபாய் பிளானும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த பிளானில், நாளொன்றுக்கு 2GB ஹை ஸ்பீட் டேட்டா கிடைக்கும். மொத்தமாக 84 நாட்களுக்கு 168 GB ஹை ஸ்பீட் டேட்டாவை ஜியோ யூசர்கள் பெறுவார்கள். தினசரி டேட்டா லிமிட்டிற்கு பிறகு அன்லிமிட் டேட்டா ஸ்பீட் 64 Kbps ஆக குறைக்கப்படும்.
அன்லிமிட்டட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டா பலன்களை தவிர இந்த பிளானில் நெட்ஃபிளிக்ஸ் (பேசிக்), ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான இலவச OTT சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும். ஜியோ சினிமா ப்ரீமியம் வசதி இதில் வராது.
மேலும் இந்த இரண்டு பிளான்களிலுமே 5ஜி பயன்படுத்தும் யூசர்களுக்கு அன்லிமிட்டட் 5G டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதனால் 5G ஃபோன் வைத்திருக்கும் மற்றும் ஜியோ 5G நெட்வொர்க் கிடைக்கும் ஏரியாக்களில் வசிக்கும் ஜியோ யூஸர்கள் ஹை ஸ்பீட் 5G இணையத்தை பயன்படுத்த முடியும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications