பெங்களூர், சூரத், மும்பையை.. பின்னுக்கு தள்ளிய நம்ம காஞ்சிபுரம்.. இந்தியாவிலேயே நம்பர் 2.. சூப்பர்!
சென்னை: இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் நகரங்களில் காஞ்சிபுரம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
ஐபோன் ஏற்றுமதியை அதிகரிப்பதன் காரணமாக காஞ்சிபுரத்தின் மொத்த ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. ஜாம்நகருக்குப் பிறகு (H1 FY 2023) மதிப்பின் அடிப்படையில் காஞ்சிபுரம் இப்போது இந்தியாவின் 2வது பெரிய ஏற்றுமதி மாவட்டமாக உள்ளது. இது 2021 இல் 7 வது இடத்தைப் பிடித்தது. தற்போது வேகமாக முன்னேறி இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.

சூரத், மும்பை, புனே, மும்பை புறநகர், பெங்களூர், ஹைதராபாத் போன்றவற்றை முந்தி காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ஐபோன் 17 உற்பத்தி: சென்னையில் ஐபோன் 16 உற்பத்தி ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில்தான்
சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவிற்கு வெளியே தொடங்கும் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ கூறியுள்ளார். சீனாவில் உற்பத்தி தொடங்கும் முன்பாக சென்னையில் இந்த முறை ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் சர்வதேச ஐபோன் மார்க்கெட்டில் சீனாவை சென்னை முந்தி உள்ளது. சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.
பெருகும் முதலீடு: சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது. சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழகத்தில் உற்பத்தியை செய்து வருகிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்து உற்பத்தி செய்து வருகிறது.
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்பத்தூர்: இந்த முதலீடுகள் எல்லாம் பெரும்பாலும் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீபெரும்பத்தூரில்தான் செய்யப்படுகின்றன. அதேபோல் ஆப்பிள் முதலீடுகள் மட்டுமின்றி மற்ற ஏற்றுமதி சார்ந்த முதலீடுகள் பல ஸ்ரீபெரும்பத்தூரில்தான் செய்யப்படுகின்றன. இந்த தொடர் முதலீடுகள்தான் தற்போது காஞ்சிபுரம் இந்த லிஸ்டில் இடம் பிடிக்க முக்கிய காரணமாகி உள்ளது.
இது போக ஆப்பிள் ஐபோன் மற்றும் பிற ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் 'Gorilla Glass' எனப்படும் திரை கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான Corning Inc., தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க ₹1,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கத்தில், 25 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 300 பேர் பணியாற்றும் வகையில் உற்பத்தி ஆலை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எங்கே அமையும்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கத்தில், 25 ஏக்கர் நிலப்பரப்பில், தேவை ஏற்பட்டால் விரிவுபடுத்தப்பட்டு, சுமார் 300 பேர் பணிபுரியும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த தொழிற்சாலைக்காக Corning தனது இந்திய ஒப்பந்த நிறுவனமான Optiemus Infracom உடன் இணைந்து செயல்படும்.
உயரும் ஏற்றுமதி: இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி, மகராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.
1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications