செல்போன் விலை சீக்கிரமே அதிகரிக்கும்.. இந்த வருடத்தை விட 2 மடங்கு உயர போகிறதாம்! என்ன காரணம்?
டெல்லி: செல்போன்கள் நமது வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்ட நிலையில், அடுத்தாண்டு செல்போன் விலை அதிகரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் விலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்தான் என்ற போதிலும், அடுத்தாண்டு விலையுயர்வு என்பது இந்தாண்டு உடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்காக இருக்கும் என்று ஒரு ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
இந்த நவீனக் காலத்தில் செல்போன் என்பது கிட்டதட்ட நமது ஆறாவது விரல் போல ஆகிவிட்டது. பர்ஸ் இல்லாமல் போனால் கூட இப்போது செல்போன் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம் என்ற நிலையே இருக்கிறது.

செல்போன்: ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்துமே செல்போனில் செய்ய முடிகிறது. அந்தளவுக்கு செல்போன் என்பது நமது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இதற்கிடையே விரைவில் செல்போன் விலை அதிகரிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நவீன உதிரிப் பாகங்கள், 5ஜி தொழில்நுட்பம், குறிப்பாக ஏஐ வசதிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட காரணங்களால் ஸ்மார்ட்போன் விலை விரைவில் உயரும் என்று தெரிகிறது..
இரண்டு மடங்கு: சர்வதேச அளவில் பார்க்கும் போது 2024ல் ஆண்டில் ஸ்மார்ட்போன் விலை சராசரி 3% உயர்ந்து இருந்தது. ஆனால், அதை விட 2025ல் விலை உயர்வு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று கவுண்டர்பாயின்ட்டின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இப்போது பல செல்போன்களிலும் ஏஐ வசதிகள் வந்துவிட்டன. பொதுமக்களும் ஏஐ வசதி கொண்ட செல்போனை வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதுவே செல்போன் உயர முக்கிய காரணமாக இருக்கப் போகிறதாம்.
ஏனென்றால் ஏஐ செயல்பட வலிமையான பிராசசர்கள் தேவைப்படுகிறது. இதனால் வலிமையான சிபியு, என்சியு, ஜிபியு கொண்ட சிப்கள் நமக்குத் தேவைப்படுகிறது. சந்தையிலும் இதற்கான தேவை அதிகம் இருக்கிறது. இந்த அதிநவீன பிராசசர்களை செய்ய அதிக செலவாகும். இதனால் மொத்தமாக செல்போன் விலையும் உயரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வல்லுநர்கள் விளக்கம்: வல்லுநர்கள் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "நாம் இப்போது ஏஐ யுகத்தில் நுழைந்துவிட்டோம். இப்போது விலை அதிகமான ஸ்மார்ட்போன்களில் மட்டும் ஏஐ வசதி இருக்கிறது. ஆனால், வரும் காலங்களில் அது மேலும் அனைத்து வகையான மாடல்களிலும் வரத் தொடங்கும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதனால் வரும் காலங்களில் ஸ்மார்ட்போன் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்கள்.
இது மட்டுமன்றி செல்போனில் அதிக பேட்டரி வசதியைத் தர வேண்டும் என்றால் அதன் பிராசசர் அளவை சிறிதாக்க வேண்டும். இப்போது 4nm மற்றும் 3nm அளவிலான பிராசசர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுபோன்ற சிறிய அதேநேரம் வலிமையான பிராசசர்களே ஏஐ செயலிகளைத் தாக்குப்பிடிக்கும். மேலும், பேட்டரியையும் குறைந்தளவு பயன்படுத்தும்.
சிக்கலானவை: ஆனால், இதுபோன்ற பிராசசர்களை உருவாக்க ஆராய்ச்சிக்கு நாம் அதிகம் செலவு செய்ய வேண்டும். கூடுதலாக, ஏஐ மென்பொருள் மற்றும் அல்காரிதம் சிக்கலானவை, அதற்கும் கூடக் கூடுதலாகச் செலவாகும். இவை அனைத்தும் சேர்ந்தே செல்போன் விலை அதிகரிக்கக் காரணமாக அமையலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
என்னதான் செல்போன் விலை உயர்ந்தாலும் அதற்கேற்ப அதிநவீன ஏஐ வசதிகளைக் கொண்டதாகவே வரும் காலத்தில் வெளியாகும் மாடல்கள் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications