அட்ரா சக்க..இனி ரயில்களிலேயே ஏடிஎம்! எல்லா நேரத்திலும் பணம் எடுக்க முடியுமா? ‘இந்த’ சிக்கல் இருக்கே!
மும்பை: மும்பையில் சோதனை முயற்சியாக பஞ்சவடி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டு இருக்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ள ரயில்களில் ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ரயில்களில் ஏடிஎம் இயந்திரங்களை நிறுவுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறுகின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
ஒரு காலத்தில் வங்கியில் பணம் எடுப்பது என்றால் மிகப்பெரிய வேலை. வங்கியில் கால் கடுக்க காத்திருந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை கேஸியரிடம் கொடுத்து பணத்தை பெறுவது பெரிய விஷயம். ஆனால், ஏடிஎம் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பணம் எடுக்கும் நடைமுறை எளிதாகி விட்டது.
தொடர்ந்து பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தங்கள் வேலைப்பளு குறைந்ததாக வங்கி பணியாளர்களும் கூறியிருந்தனர். இதற்கிடையே இந்தியாவில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு ரூபாய் நோட்டுக்களை கையாளுவதில் தயக்கம் இருந்ததால் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை மக்கள் நாடத் தொடங்கினர். தற்போது வீட்டிலிருந்து வெளியே வந்தால் ஒரு ரூபாய் கூட பலர் கையில் இருப்பதில்லை. காரணம் பெட்டிக்கடைகளில் இருந்து சூப்பர் மார்க்கெட்டுகள் வரை எல்லாமே டிஜிட்டல் பேமென்ட்-ஐ ஏற்றுக் கொள்கின்றன. அதே நேரத்தில் பயணங்களின் போது பணம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. தாகத்திற்கு தண்ணீர் வாங்க வேண்டும் என்றால் கூட கையில் பணம் வேண்டும்.
குறிப்பாக ரயில் பயணங்களில் பணம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. ரயிலுக்குள்ளே அமர்ந்து கொண்டு டீ முதல் உணவு வரை வாங்க பணம் அவசியம். ரயில்வே உணவு பணியாளர்களும் டிஜிட்டல் பேமென்ட் ஏற்றுக்கொள்வதில்லை. பிளாட்பார வியாபாரிகளிடமும் பணம் கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கும். தற்போது யுபிஐ செயலிகள் அடிக்கடி செயல் இழந்து போவதால் நூறு ரூபாய் பணமாவது கையில் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் மீண்டும் ஏடிஎம் மையங்களை மக்கள் தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் ரயில் பயணங்களின் போது அக்கவுண்டில் இருந்தாலும் ஒரு ஏடிஎம் இருந்தால் எப்படி இருக்கும் என நினைப்பார்கள். அதனை நடைமுறைப்படுத்த தான் களமிறங்கி இருக்கிறது இந்திய ரயில்வே. தற்காலிகமாக சோதனை அடிப்படையில் ரயிலில் ஏடிஎம் இயந்திரத்தை பொருத்தி சோதனை செய்து பார்த்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் ரயில் நிலையம் - நாசிக் மன்மத் ரயில் நிலையம் இடையே இயக்கப்படும் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை முயற்சியாக ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டு இருக்கிறது.
மஞ்சவை ரயில் நிலைய பணிமனையில் இதற்கான வேலைகள் நிறைவடைந்து நிலையில் அந்த பெட்டி ரயிலுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. பிரபல தனியார் வங்கி ஏடிஎம் தான் அங்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவை ரயில்வே துறை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதனை பலரும் வரவேற்று இருந்தனர். அதே நேரத்தில் இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு வர முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
காரணம் ஏடிஎம் இயந்திரத்திற்கு நெட்வொர்க் மிகவும் அவசியம். இணையதள சேவை இல்லை என்றால் ஏடிஎம் இயந்திரங்களால் முழுமையான சேவையை வழங்க முடியாது. நீண்டதொரு பயணத்தின் போது இடையிடையே நெட்வொர்க் இல்லாத சூழலில் பணம் எடுப்பது மிக சிக்கலாக மாறிவிடும். நெட்வொர்க் இருக்கும் இடத்தில் ஏடிஎம் பின் உள்ளிட்டவற்றை பதிவிட்டால் நெட்வொர்க் இல்லாத இடத்தில் பணம் வெளியே வராது. ஆனால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விடும்.
தற்போது ரயில்களில் இணைய சேவை வழங்கப்பட்டாலும் இடையிடையே அவை தடை படுகிறது. இதனால் ஸ்டார்லிங் போன்ற பெரிய நிறுவனங்களின் உதவியோடு இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் தற்போது பல மாநிலங்களில் வட மாநில கொள்ளையர்கள், கொலை கொள்ளை சம்பவங்களில் ரயில்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏடிஎம்-க்கு என்று தனியாக காவலாளிகளை நியமிக்க வேண்டும். இது போன்ற சில நடைமுறை சிக்கல்களை தீர்த்து விட்டால் ரயில் ஏடிஎம் பயணிகளுக்கு மிக சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரான வேத காட்வின் எபிநேசர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications