தீபாவளி பரிசு.. வெறும் ரூ.799 விலையில் ஜியோ பாரத் புதிய மாடல் போன் அறிமுகம்.. 4 சிறப்பு வசதிகள்
சென்னை: தமது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளிப் பரிசாக, பேசிக் 4 ஜி செல்போன்களை வெறும் ரூ.799-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ஜியோ பாரத் செல்போன்கள், குழந்தைகள் சமூக ஊடக கவனச் சிதறல்கள் இல்லாமல், ஸ்மார்ட் லொக்கேஷன் மற்றும் கால் மேனேஜ்மெண்ட் மூலம் தொடர்பில் இருக்க உதவும்.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ பாரத் போனை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு மலிவான விலையில் ஜியோ பாரத் போன் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பாரத் புதிய மாடல் அறிமுகம்
இந்தியா மொபைல் காங்கிரஸ்-2025 மாநாட்டில் ஜியோ பாரத் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட பேட்டரி ஆயுள், ரியல் டைம் லொக்கேஷன் தகவல்கள் மற்றும் கால் மேனேஜ்மெண்ட் கட்டுப்பாடுகள் போன்ற பல அம்சங்களுடன் ஜியோ பாரத் போன் அறிமுகமாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனர்களின் பாதுகாப்பை முக்கிய நோக்கமாக கருத்தில் கொண்டு, ஜியோ போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜியோ நிறுவனம் மேலும் கூறுகையில், "தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கவனிச்சிதறல்களும் ஆபத்துகளும் நேரிடுகின்றன. இந்நிலையில் குழந்தைகள் மற்றும் பெரியோர்களை ஸ்மார்ட்போன்களின் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க விரும்பும் பெற்றோர்களுக்கு, ஜியோ பாரத் போன் மிகச்சிறந்த மாற்றாக இருக்கும்.
ஜியோ பாரத் போன்களில் நான்கு முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பாதுகாப்பு அம்சங்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்" என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
4 பாதுகாப்பு அம்சங்கள்
1. இருப்பிட கண்காணிப்பு (Location Monitoring): இதன் மூலம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்லும்போது அவர்களின் ரியல் டைம் லொக்கேஷனை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும்.
2. யூசேஜ் மேனேஜர்: இந்த அம்சத்தின் மூலம் தெரியாத நபர்களின் அழைப்புகளை தடுத்தல், நம்பகமான அழைப்புகளை மட்டும் அனுமதித்தல் மற்றும் கவனச்சிதறல்களை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
3. போன் கண்காணிப்பு: இணைய வசதி மற்றும் பேட்டரி அளவு ஆகியவற்றின் நேர கண்காணிப்பை பெற்றோர்களால் பார்க்க முடியும். இதன் மூலம் ஜியோ பாரத் போன் போனில் பேட்டரி தீர்ந்து விடுவது மற்றும் மிஸ்டு கால்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
4. பேட்டரி: ஜியோ பாரத் போன்களில் குறைந்தபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என்பதால், முக்கியமான நேரங்களில் போன் செயல்படுவது உறுதி செய்யப்படும். மேலும் போன்களை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அமேசான், ஜியோ ஸ்டோர்கள், ஜியோ மார்ட், முன்னணி மொபைல் கடைகள் மற்றும் ஸ்விகி இன்ஸ்டாமார்ட் போன்ற இடங்களில் ஜியோ பாரத் போன்கள் கிடைக்கும். இந்த ஜியோ பாரத் போன்களின் விலை ரூ.799 முதல் தொடங்குகிறது.
ரீசார்ஜ் பிளான்
ரூ.123-க்கு ரீசார்ஜ் செய்தாலே 28 நாள்களுக்கு இலவச அழைப்புகள், தினமும் 500 எம்பி டேட்டா, 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ.369-க்கு ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ஒரு மாதத்துக்கு இலவச சேவைகள் என மிகவும் மலிவான கட்டணத்தில் 4ஜி சேவைகளை ஜியோ பாரத் மூலம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications