அடிதூள்.. இனி மாதாமாதம் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை! சிம் கார்டும் முடங்காது! நோட் பண்ணுங்க
டெல்லி: இப்போது கிட்டதட்ட எல்லாரிடமும் இரண்டு சிம் இருக்கிறது. பயன்படுத்தவே இல்லை என்றாலும் கூட இரண்டு சிம்களுக்கும் மாதாமாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது. இதற்கிடையே இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இந்த நவீனக் காலத்தில் கிட்டதட்ட செல்போன் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. அதிலும் பெரும்பாலானோர் மொபைலில் இரண்டு சிம்களை வைத்திருக்கிறோம்.

இதற்கிடையே செல்போன் ரீசார்ஜ் தொடர்பாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்
டிராய் வழிகாட்டுதல்:
இந்த காலகட்டத்தில் பொதுவாகப் பலரும் இரு சிம்களை வைத்திருப்பார்கள். இரண்டிற்கும் மாதம் குறைந்தது சில நூறு ரூபாய்க்காவது ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. இல்லையென்றால் இன்கமிங் கால் பிளாக், சிம் முடக்கம் என எது வேண்டுமானாலும் ஆகலாம் என்ற அச்சமும் பொதுமக்களிடையே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் சிம் கார்டுகளை நீண்ட காலத்திற்கு ரீசார்ஜ் செய்யாமல் ஆக்டிவாக வைத்திருக்க வழிவகை செய்யும் வகையில் டிராய் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
டிராயின் இந்த புதிய வழிகாட்டுதல்கள் பயனர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும், செலவுகளைக் குறைக்கவும் உதவுவதாக இருக்கும். டிராய் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இப்போது ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் ரூல்ஸை மாற்றி அமைந்துள்ளன.
ஜியோ:
இந்த வழிகாட்டுதல்களின்படி அனைத்து ஜியோ சிம்களும் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் கூட 90 நாட்கள் வரை ஆக்டிவாக இருக்கும். அதன் பிறகே முடங்கும். அதுவும் கூட ஒரு ரீசார்ஜ் செய்து மீண்டும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். அதேநேரம் இன்கமிங் கால் என்பது மாறுபடும். நாம் கடைசியாக எந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தோமோ.. அதை அடிப்படையாக வைத்து இன்கமிங் கால் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அல்லது சில நாட்களுக்கு மட்டும் கூட இருக்கும். 90 நாட்கள் கடந்தும் சில வாரங்கள் வரை யூசர் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் மட்டுமே சிம் நிரந்தரமாகத் துண்டிக்கப்பட்டு வேறு ஒரு நபருக்கு வழங்கப்படும்
ஏர்டெல்:
ஏர்டெலை பொறுத்தவரையும் கடைசி ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி முடிந்து 90 நாட்கள் வரை சிம் ஆக்டிவாக இருக்கும். அதன்பிறகு, பயனர்கள் தங்கள் சிம்களை மீண்டும் ஆக்டிவேட் செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்தக் காலகட்டத்திற்குள் அவர்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் நம்பர் நிரந்தரமாக முடக்கப்பட்டு புதிய யூசருக்கு அது ஒதுக்கப்படும்.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியாவிலும் கிட்டதட்ட இதேபோலத் தான் 90 நாட்கள் வரை சிம் ஆக்டிவாக இருக்கும். அதன் பிறகு குறைந்தபட்சம் ரூ.49 திட்டத்தில் தங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இல்லையென்றால் சிம் முடக்கப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்படும்.
பிஎஸ்என்எல்
இதில் பிஎஸ்என்எல் நிறுவனம்தான் யூசர்கள் அதிகபட்ச பலன்களைத் தருகிறது. பிஎஸ்என்எல் சிம் வைத்திருக்கும் ஒருவர் அதிகபட்சமாக 180 நாட்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் வைத்திருக்கலாம்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications