"பெகாசஸ்" நினைவிருக்கா.. ஐபோன்களில் வந்த பரபர அலர்ட்.. உடனே செய்ய வேண்டியது என்ன! ஆப்பிள் எச்சரிக்கை
டெல்லி: பெகாசஸ் ஸ்பைவேர் செயலியைக் குறிப்பிட்டு ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு அலர்ட் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
பாதுகாப்பு கருத்தில் இப்போது பலரும் ஆப்பிள் சாதனங்களையே பயன்படுத்தி வருகிறார்கள். ஆன்டிராய்டை காட்டிலும் ஐபோன்களில் பாதுகாப்பு அம்சம் அதிகம் என்றாலும் அதை ஹேக் செய்யவே முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது.

பல எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் பெகாசஸ் உளவு செயலி ஹேக் செய்யப்பட்டதாகக் கடந்த 2021 முன்பு புகார் அளித்தது பலருக்கும் நினைவு இருக்கலாம்.
எச்சரிக்கை மெசேஜ்: இந்தச் சூழலில் சில மாதங்கள் கழித்து இப்போது ஆப்பிள் நிறுவனம் மொபைலை தாக்கும் ஸ்பைவேர் குறித்து இந்தியா உட்பட 92 நாடுகளில் உள்ள தனது பயனர்களுக்கு வார்னிங் மெசேஜை அனுப்பியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது. இந்த எச்சரிக்கை மெசேஜ் குறித்து ஆப்பிள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர்கள் பெகாசஸ் ஸ்பைவேரையும் குறிப்பிடுகிறார்கள்.கடந்த 2021இல் பெகாசஸ் மூலம் தங்கள் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இஸ்ரேல் உளவு அமைப்பு இந்த பெகாசஸ் செயலியை உருவாக்கி இருந்தது. இது அரசு மற்றும் அரசு சார்ந்த ஏஜென்சிகள் மட்டுமே வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. அவர்கள் புகார் அளித்த 29 பேரின் மொபைல்களில் பெகாசஸ் ஸ்பைவேரை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள்: இதுபோன்ற ஸ்பைவேர்களால் பாதிக்கப்பட்ட பயனாளர்கள் எச்சரிக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "வழக்கமான சைபர் அட்டாக் மற்றும் வைரஸ் தாக்குதல்களை விட இவை சிக்கலானவை. ஏனென்றால் அதனால் மிக குறைந்த அளவிலேயே நபர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் இதுபோன்ற தாக்குதல்களைக் கண்டறிதல் மற்றும் தடுப்பது மிகவும் கடினம்..
பெகாசஸ்: பெரும்பாலும் இதுபோன்ற தாக்குதல்கள் குறிப்பிட்ட அரசு அல்லது அரசு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. என்எஸ்ஓ குழுமம் உருவாக்கிய பெகாசஸ் போலப் பல மால்வேர்களை நாம் உதாரணமாகச் சொல்லலாம். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தனிநபர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாகப் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 2021 முதல் 150 நாடுகளில் உள்ள பயனர்களுக்குப் பல முறை எச்சரிக்கை அனுப்பி உள்ளோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்: மேலும், இதுபோல எச்சரிக்கை மெசேஜில் பயனாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மெசேஜை பெறும் யூசர்கள் தங்கள் ஐபோன்களில் Settings > Privacy & Security > Lockdown Mode-க்கு செல்ல வேண்டும். இதை ஆன் செய்ய சில நொடிகள் கூட ஆகாது. இருப்பினும், இவை மிகச் சிறந்த பாதுகாப்பை நமக்குத் தருவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும், இந்த மெசேஜ் வந்த உடனேயே ஐபோனை சமீபத்திய அப்டேட் செய்ய வேண்டும். ஐவாட், மேக் போன்ற வேறு ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்தினால் அதையும் அப்டேட் செய்ய வேண்டும். மேக் அல்லது ஐபேடிலும் இதேபோல இல் லாக் டவுன் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இது நமது சாதனத்திற்குத் தேவையான பாதுகாப்பு தரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications