"50 நாள் இலவசம்.." சரியாக ஐபிஎல் தொடரின்போது ஜியோவில் அள்ளி கொடுத்த அம்பானி.. கடைசியில் ஒரு ட்விஸ்ட்
டெல்லி: ஜியோ நிறுவனம் தனது ஏர் பைபர் சேவையை 50 நாட்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. ஆனால், இதில் சின்னதாக ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் டெலிகாம் துறையில் ஜியோ நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. இருக்கும் கஸ்டமர்களை தக்க வைக்கவும் புதிய கஸ்டமர்களை சேர்க்கவும் ஜியோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், ஸ்மார்ட்போனை தாண்டி வேறு துறைகளிலும் ஜியோ நுழைய முயன்று வருகிறது. அப்படி ஜியோ அறிமுகப்படுத்தியது தான் ஜியோ ஏர்ஃபைபர்.
ஜியோ: இதன் மூலம் அதிவேகத்தில் நிலையான இணையச் சேவை பெற முடியும் என்றே அவர்கள் விளம்பரப்படுத்தினார்கள். இந்த ஜியோ ஏர் ஃபைபர் இப்போது இந்தியாவில் 5352 நகரங்களில் கிடைக்கிறது. இதற்கிடையே இது குறித்து மக்களிடையே விளம்பரப்படுத்த, ஜியோ நிறுவனம் தனது சேவையை 50 நாட்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோவில் புதிய வாடிக்கையாளர்களுக்கும் சரி, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களும் சரி இது பொருந்தும் என்று அரிக்கப்பட்டுள்ளது.
இப்போது தான் ஐபிஎல் போட்டிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், சரியான நேரத்தில் தான் இந்த ஆப்பரை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளை லைவில் ஸ்ட்ரீமிங் செய்யப் பலரும் இப்போது ஜியோ சினிமாஸ் பக்கம் வரும் நிலையில், சரியான நேரத்தில் தான் ஜியோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் 50 நாள் இலவசம் என்றாலும் வழக்கம் போல சில கண்டிஷன்கள் இருக்கிறது. அவை குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
2 கண்டிஷன்கள்: இந்த ஜியோ ஏர் ஃபைபர் 50 நாட்கள் இலவச சேவையை நீங்கள் பெற வேண்டும் என்றால் நீங்கள் ஏற்கனவே மொபைலில் 5ஜி சேவையைப் பயன்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு மேல் அந்த 5ஜி சேவையை நீங்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதாவது மொபைல் மூலம் நீங்கள் கடந்த 2 வாரம் தொடர்ச்சியாக 5ஜி சேவையைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அல்லது உங்களிடம் ஏற்கனவே ஏர் ஃபைபர் இருந்தால் அதில் இரண்டு வாரங்களுக்குத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
இது கூட ஓகே நம்மில் பெரும்பாலானோர் 5ஜி சேவையைப் பயன்படுத்தித் தான் வருகிறார்கள். இதில் பிரச்சினை இல்லை. ஆனால் அடுத்த விஷயம் தான் பெரிய ட்விஸ்ட்.. அதாவது ரூ.599 அல்லது அதை விட அதிக தொகைக்கு நீங்கள் 6 அல்லது 12 மாதங்களுக்கான ஒடிடி சேவைக்கான கட்டணத்தைச் செலுத்தி இருக்க வேண்டும். இந்த கட்டணத்தைச் செலுத்தினால் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களின் மை ஜியோ கணக்கில் ஏர் பைபருக்கான இலவச சேவை வரவு வைக்கப்படும்.
கடைசி தேதி: இந்த ஆப்பர் கடந்த மார்ச் 16ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில நேரங்களில் ஜியோ முன்கூட்டியே கூட முடித்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் இலவச சேவை நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்ப முடியாது.
இப்படி சில ட்விஸ்ட்கள் இருந்தாலும் இலவசமாக ஏர் பைபரை பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சரியான ஒரு ஆப்பராகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications