உங்க மொபைல் தொலைஞ்சு போச்சா! செய்ய வேண்டிய 6 விஷயம்.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்! இல்லனா ரொம்ப டேஞ்சர்
சென்னை: மொபைல் வெளியே திடீரென தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்.. நமது தரவுகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது நாம் எங்குச் சென்றாலும் மொபைலை கையோடு எடுத்தே செல்கிறோம்.. ஆனால், எதிர்பாராத விதமாக மொபைல் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும் என நமக்குத் தெரியாது.

மொபைல் தொலைந்து போனால் நேரடியாக என்னவெல்லாம் செய்ய வேண்டும். மொபைலை மீட்கவும் தரவுகளை பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
முதலில் இதைச் செய்யுங்கள்: உங்கள் மொபைல் மாயமானால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது. அதற்கு போன் செய்வது தான். இதெல்லாம் ஒரு விஷயமா என நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மையில் உங்கள் மொபைல் யாராவது நல்ல உள்ளத்திடம் கிடைத்தால் அவர்கள் உங்களிடமே திருப்பி தர வாய்ப்பு இருக்கிறது.
பெரும்பாலும் இப்போது மொபைல் லாக் செய்தே வைத்திருப்போம். எனவே, மொபைலை எடுத்தவர்கள் திரும்பித் தர முயன்றாலும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது. எனவே, மாயமான உங்கள் மொபைல் நம்பருக்கு கால் செய்தால்.. திரும்ப அவர்களே வந்து கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து என்ன செய்யலாம்: எடுத்தவர் நல்லவர் இல்லை.. உங்கள் காலுக்கு பதிலளிக்கவில்லை என்றால் நீங்கள் அடுத்து மொபைலை லாக் செய்ய வேண்டும். ஐபோன் பயன்படுத்துவோர் உங்கள் ஆப்பிள் அக்கவுண்டிற்கு சென்று Lost Modeஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதேபோல ஆண்ட்ராய்டு யூசர்கள் Android Device Manager மூலம் உங்கள் மொபைல் கடைசியாக எங்கே இருந்தது என்பதைப் பார்க்கலாம்.
அடுத்து ஜிபிஎஸ் தரவுகளை வைத்து மொபைல் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். இருப்பினும், அதற்கு ஜிபிஎஸ் வசதி உங்கள் மொபைலில் ஆனில் இருக்க வேண்டும். இது சற்று கடினம்தான்.
தரவுகளை டெலிட் செய்ய: உங்கள் மொபைல் காணாமல் போனது உறுதியாகவிட்டது. அதை மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் முதலில் அதில் இருக்கும் அனைத்து தரவுகளும் அழிக்க வேண்டும். உங்கள் மொபைலை எடுத்தவருக்கு உங்கள் தனிப்பட்ட தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்ய ரிமோண்ட் மூலம் தரவுகளை டெலிட் செய்து விடுங்கள். ஐபோன் பயனாளர்கள் உங்கள் ஆப்பிள் அக்கவுண்டில் இதைச் செய்யலாம். அதேபோல ஆண்ட்ராய்டு யூசர்கள் Find My Device மூலம் இதைச் செய்யலாம்.
ஒரு முறை நீங்கள் டேட்டாவை அழித்துவிட்டீர்கள் என்றால்.. அதன் பிறகு உங்கள் மெயில் ஐடி அல்லது ஆப்பிள் அக்கவுண்ட் மூலம் டிராக் செய்ய முடியாது என்பதால் இதைச் செய்யும் முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

சிம் கார்டுகள் பிளாக்: அடுத்து உங்கள் சிம் கார்டுகளை பிளாக் செய்து புதிய டுபிளிகேட் சிம் கார்டுகளை வாங்குங்கள். உங்கள் மெயில் மற்றும் சமூக வலைத்தளங்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுங்கள்.
இப்போது மொபைல் தான் நமக்கு 6ஆம் விரலாகவே இருக்கிறது. வங்கிக் கணக்கு தொடங்கி உணவு டெலிவரி வரை அனைத்து அக்வுண்டுகளும் அதில் தான் இருக்கிறது. பெரும்பாலும் தரவுகளை டெலிட் செய்தாலே.. இதிலும் லாக் அவுட் ஆகிடும். இருப்பினும், அதையும் உறுதி செய்யுங்கள்.
இதைச் செய்தால் கிடைக்கும்: இத்தனை காலம் மொபைல் தொலைந்தால் இதை மட்டுமே நம்மால் செய்ய முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது மத்திய அரசு இதற்காக CEIR என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. மொபைல் தொலைந்தவர்கள் இந்தத் தளத்திற்குச் சென்று தேவையான தரவுகளை கொடுத்தால் மொபைல் பிளாக் செய்யலாம். அது இருக்கும் இடத்தை கூட கண்டுபிடிக்கலாம்.
இதற்கு நமக்கு மொபைல் எண், அதை வாங்கியதற்கான பில், மொபைலின் ஐஎம்இஐ எண், மாடல் குறித்த தகவல்கள் தேவை. மேலும் மொபைல் மாயமானது குறித்து நாம் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். இதற்கான டிஜிட்டல் காபியையும் நாம் இதில் அப்லோட் செய்ய வேண்டும். அப்போது தான் மொபைலை இதைப் பயன்படுத்தி நம்மால் லாக் செய்ய முடியும்.
இவை அனைத்தையும் செய்தால் தொலைந்து போன உங்கள் மொபைலை கண்டுபிடிக்கலாம். அல்லது குறைந்தது உங்கள் தரவுகளையாவது பாதுகாக்கலாம்.












Click it and Unblock the Notifications