உங்க போன் திடீர்னு ரொம்ப சூடாகுதா..? இது மட்டும்தான் காரணம்.. இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
சென்னை: இன்று அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை பெரும்பாலான நேரத்தை மொபைல் போனுடன் தான் கழிக்கிறோம். ஸ்மார்ட் போன்கள் சில நேரங்களில் மிகவும் சூடாகிவிடுவது உண்டு. மொபைல் போன் சூடாவதை தவிர்க்க உதவும் சிம்பிளான டிப்ஸ் இங்கே..
ஸ்மார்ட் ஃபோன்கள் சில மணி நேரம் தொடர்ச்சியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலே சூடாக இருக்கும். நீண்ட நேரம் சார்ஜ் செய்துவிட்டு, மொபைலைக் கையில் எடுத்தாலும் மிகவும் சூடாக இருக்கும். போன் வெடித்து விடுமோ எனும் அச்சம் ஏற்படும் அளவுக்கு சில சமயங்களில் கொதிப்பதும் உண்டு.
ஸ்மார்ட் ஃபோன்கள் வெப்பத்தை தாங்கும் வகையில்தான் வடிவமைக்கப் பட்டிருந்தாலும், சூடாகவே செய்கிறது. மொபைல் போன் சூடாகும் பிரச்சனையை குறைக்கும் சில வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமான 10 டிப்ஸ் இங்கே:

1. பலரும் செய்யும் முக்கியமான தவறு, இரவு தூங்கும்போது சார்ஜ் போட்டுவிட்டு படுப்பது. போன் முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் கூட சார்ஜிலேயே போனை விட்டுவிடுவதால் கூட மொபைல் சூடாகலாம்.
2. நீண்ட நேரம் கேம் விளையாடும் போதும், தொடர்ச்சியாக இன்டெர்நெட் பயன்படுத்தும்போது மொபைல் அதிகம் சூடாகி விடும். அதுபோன்ற சமயங்களில் போன் கவரை கழற்றி விடவேண்டும்.
3. போன் கவரை தேர்வு செய்யும்பொழுது, ரப்பர் அல்லது கண்ணாடி உள்ள கவரையே தேர்ந்தெடுப்பது நல்லது. பிளாஸ்டிக் மற்றும் பாலிகார்பனேட் கவர்கள் சூட்டை தக்க வைத்துக்கொள்ளும் என்பதால் மொபைல் சூடு உடனடியாக குறையாது.
4. ப்ளூடூத், மொபைல் டேட்டா, லொக்கேஷன், வைஃபை ஆகியவற்றை உபயோகிக்காத சமயங்களில் அணைத்து வைக்க வேண்டும். சில செயலிகளை பயன்படுத்தும் போது தானாகவே அவை ஆன் ஆகி விடும். அவை பேட்டரியை அதிகம் பயன்படுத்துவதோடு, சூடாகவும் வழிவகுக்கும். எனவே அதை கவனித்து ஆஃப் செய்வது நல்ல்து.
5. போனை சார்ஜ் செய்து கொண்டிருக்கும் போது பயன்படுத்துவதால் மிக எளிதாக சூடாகும். டிஸ்ப்ளே பிரைட்னெஸ்ஸை முடிந்தளவு குறைத்தாலே சூடாவதை வெகுவாக குறைக்கலாம்.
6. பாடல்கள் கேட்டுக்கொண்டே கேம் விளையாடுவது, ஒரே நேரத்தில் பல ஆப்களை இயக்குவது போன்றவற்றால் ஸ்மார்ட் ஃபோனில் வெப்பம் அதிகரிக்கும். குறைவான ராம் கொண்ட போன்களில் ஒரே நேரத்தில் அதிக ஆப்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

7. தேவையற்ற செயலிகளை மொபைலில் வைத்திருப்பதை தவிர்க்கலாம். குறைவான ராம் மெமரி கொண்ட போன்களில் அதிக இடத்தை அடைத்துக்கொள்ளும் ஆப்களை வைத்திருந்தால் மொபைல் ஹாங் ஆவதோடு, சூடாகவும் கூடும்.
8. மொபைல் போனுடன் வந்த ஒரிஜினல் பேட்டரி பழுதானால் அல்லது, சார்ஜ் நிற்காவிட்டால் பேட்டரியை மாற்றும்போது, குறைந்த விலையில் கிடைக்கிறது என போலியான பேட்டரிகளை வாங்குவது ஆபத்தில் முடியலாம். போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும். சில நேரங்களில் அதிக வெப்பத்தினால் வெடிக்கவும் கூடும்.
9. நீங்கள் பயன்படுத்தும் சார்ஜர் உங்கள் மொபைலுடன் வழங்கப்பட்டதா அல்லது ஒரு நம்பகமான நிறுவனம் தயாரித்ததா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். மொபைலின் சார்ஜிங் போர்ட் மற்றும் சார்ஜர் சேதமடையாமல் இருப்பதும் அவசியம். தரமற்ற சார்ஜர்களை பயன்படுத்துவதும் பேட்டரி சூடாக காரணமாகும்.
10. போனை அதிக வெப்பம் உள்ள இடங்களில் வைப்பதும் கூடாது, சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களில் போனை வைத்துவிட்டு எடுத்தால் போன் நிச்சயம் கொதிக்கும். இயந்திரங்கள், டிவி, அருகிலும் போனை வைப்பதை தவிர்ப்பது சூடாகும் பிரச்சனையை தவிர்க்க உதவும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications