பண்ணை வீட்டு பாடகி போல சிக்கும் 10 பிரபலங்கள்? மூன்று எழுத்து நடிகர் இவரா? ரிசார்ட்டில் அக்கப்போர்
சென்னை: 3 எழுத்து நடிகர் ஒருவரும், 2 முன்னணி நடிகர்கள் உட்பட 10 பேர் விரைவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சிக்குவார்கள் என்ற பரபரப்பு தகவல்கள் இணையத்தில் தீயாய் வலம் வரும்நிலையில், இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார்.. பிரசாந்த், பிரதீப் போன்றோரை குண்டர் சட்டத்தில் கைது செய்துவிட்டனர்.. போலீசார் விரைவில் இதனை கட்டுக்குள் கொண்டு வருவார்கள்" என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தும் பட்டியலில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 பிரபலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக 3 எழுத்து பெயர் கொண்ட முன்னணி நடிகர் ஒருவர் தான் நடத்தும் பார்ட்டிகளில் இந்த போதைப்பொருளை வழங்கி வருவதாக கூறியுள்ளார்.

டாப் நடிகர்கள்
இதைத்தவிர 2 டாப் நடிகர்களும் இந்த லிஸ்டில் உள்ளார்களாம். நடிகர்கள் மட்டும் இன்றி ஒரு சில முன்னணி நடிகைகளும் போதைக்கு அடிமையாகி கிடக்கிறார்களாம். அதுபோலவே இளம் இசையமைப்பாளர் ஒருவர், போதை பொருளை இழுக்காமல் தூங்கவே மாட்டாராம். மியூசிக்கும் கம்போஸ் பண்ண மாட்டாராம்.. இப்படி 10 பிரபலங்கள் போதை தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளதாகவும் அவர்களிடம் கூடிய விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வலம்வருகின்றன.
இந்நிலையில், King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "பிரசாந்த் தந்த கொகைனை சாப்பிட்டு ஸ்ரீகாந்த் அடிமையாகிவிட்டார்.. அவர் இதற்கு அடிமையாக காரணம், தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட பண நஷ்டம் அடைந்தது, அடமானம், வட்டி, கடன் தொல்லைகளில் சிக்கி விட்டார்.. படங்களும் கைவசம் இல்லாததால், மன உளைச்சலுக்கு ஆளானார்.. அந்த கவலைக்கு மருந்தாக கொகைனை சாப்பிட்டுதான் அடிமையாகியிருக்கிறார்..
வாக்குமூலம் தந்த ஸ்ரீகாந்த்
இதைத்தான் கோர்ட்டில் வாக்குமூலமாக சொல்லி உள்ளார்.. பிரசாந்த்திடம் போன் செய்து கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டதாக சொல்லி உள்ளார். சினிமாவில் நிறைய நடிகர்கள், இசையமைப்பாளர்களிடம் இந்த பிரசாந்த் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.. அந்தவகையில்தான் கிருஷ்ணாவும் தொடர்பில் இருந்திருக்கலாம் என தெரிகிறது..
கிளப், பார், ஈசிஆர் பங்களாக்களில் அதிக பார்ட்டி கலாச்சாரம் நடக்கிறது. நடிகைகள், நடிகர்களிடம் பணம் ஒரு பொருட்டு இல்லை என்பதாலும், பொதுவெளியில் சாதாரண நபர்களை போல அவர்களால் நடமாட முடியாததாலும், இதுபோன்ற ரிசார்ட்கள், பார்கள் கிளப்களுக்குதான் செல்ல நேரிடுகிறது. அங்குதான் தன்னுடைய சகாக்களையும் நேரில் சந்தித்து பேச முடிகிறது, பழக முடிகிறது.
மன்சூர் அலிகான்
இப்படித்தான் மன்சூர் அலிகான் மகன், ஷாருக்கான் மகன் பிடிபட்டார்கள்.. நிகில் கல்யாணியின் சகோதரி சஞ்சய் கல்ராணியையும், போதை பொருள் விற்பதாக சொல்லி கைது செய்தார்கள்.. தக் லைஃப் படத்தில் பாடிய ஒரு பாடகியும் பண்ணை வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில் போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டார். இப்படி கலாச்சார சீரழிவுகள் ஆரம்பமாகிவிட்டது.
ஸ்ரீகாந்த் கைதுக்கு பிறகு 10 பிரபலங்கள் மாட்ட போவதாக சொல்கிறார்கள்.. 10 என்றில்லை, அதைவிட அதிகமாகவே இருக்கலாம்.. போதைப்பழக்கத்துக்கு பழக்கமானவர்கள் யார் என்பதை பொதுமக்களே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.. மன்சூர் அலிகான் மகன் கைதானபோது, இந்த விஷயம் பேசுபொருளாக மாறவில்லை.. ஆனால், ஸ்ரீகாந்த் கைது என்பதால்தான், இந்த அளவுக்கு விஷயம் வெளியே தெரிகிறது.
3 எழுத்து நடிகர்
தமிழ் சினிமா உலகில் கொகைன் சப்ளை செய்த பிரசாந்த் , சங்ககிரியை சேர்ந்த பிரதீப் என்பவரிடம் கொகைன் வாங்கியிருக்கிறார்.. பெங்களூரை சேர்ந்த நைஜீரியன் ஒருவரிடம் இந்த பிரதீப் கொகைன் வாங்கியிருக்கிறார்.. இதெல்லாம் ஒரு நெட்வொர்க்.. ஸ்ரீகாந்த்தை பொறுத்தவரை, வெறுமனே கொகைனை உபயோகித்து மட்டும் இருக்கிறாரா? அல்லது வேறு யாருக்காவது விற்றிருக்கிறாரா தெரியவில்லை. ஒருவேளை விற்பனை செய்திருந்தால் பெரிய தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
3 எழுத்து கொண்ட பிரபலமும் சிக்குவார்கள் என்கிறார்கள்.. இந்த 3 எழுத்து கொண்டவர்கள் நிறைய உள்ளது.. இப்படியெல்லாம் பொதுவாக யூகம் செய்ய முடியாது.. யூகம் செய்யக்கூடிய அளவுக்கு இது கன்டெண்ட்டும் கிடையாது.. விசாரணையில்தான் மட்டுமே உண்மை தெரியவரும்..
பெரிய பெரிய பப்கள்
ஆனால், இந்த போதைப்பொருள் சினிமா துறையில் மட்டுமே இல்லை.. லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஐடியில் வேலை பார்ப்பவர்களிடமும் இந்த பழக்கம் உள்ளது..
பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெரிய பெரிய பப்கள், பார்களில், நள்ளிரவு 1 மணிக்கு மேல் நிலைதடுமாறி வரும் பலரை கண்கூடாக பார்க்கலாம்.. இப்போது போதைப்பொருள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், பிரசாந்த், பிரதீப் போன்றோரை குண்டர் சட்டத்தில் கைது செய்துவிட்டனர்.. போலீசார் விரைவில் இதனை கட்டுக்குள் கொண்டு வருவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications