2020ல் கலக்கப் போகும் முத்தான 3 ஷோக்கள்... ஜெயிக்கப் போவது யாரு?
சென்னை: 2020ம் வருடத்தில் சின்னத்திரை உலகத்தில் கலக்கப் போவது ராதிகா சரத்குமார்தான் போல. அவரது இரண்டு ஷோக்கள் 2020ம் ஆண்டைக் கலக்கப் போகின்றன.
கடந்த ஆண்டு பெரிய திரையில் மட்டுமே முகம் காண்பித்துக் கொண்டு சின்னத்திரைக்கு டாடா காண்பித்து விட்டு இருந்த ராதிகா இந்த வருடம் சன் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி என்று இரு களங்களில் அசரடிக்கப் போகிறார்.
கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி, சன் டிவியின் சித்தி 2 இவரை பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. 2020ம் ஆண்டில் சின்னத் திரையில் இந்த இரு தொடர்களும் பெரும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பு
2020 பெரும் எதிர்பார்ப்பு ஆண்டாக சின்னத்திரையில் இருப்பது சன் டிவியில் சித்தி 2 சீரியல், கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சி மற்றும் ஜீ தமிழ் டிவியின் திரையின் திருவிழா நிகழ்ச்சி மூன்றும்தான்.

கோடீஸ்வரி நிகழ்ச்சி
ராதிகா சரத்குமார் கலர்ஸ் தமிழ் டிவியில் இன்று இரவு முதல் நடத்த இருக்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டி உள்ளது. இது பெண்களுக்காக நடத்த இருக்கும் நிகழ்ச்சி என்பதாலும், முதன் முதலாக ராதிகா நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடத்தும் ஒரு நிகழ்ச்சி என்பதாலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் தூண்டி உள்ளது.

சித்தி 2 சீரியல்
சித்தி 2 சீரியல் பத்தி கேட்கவே வேண்டாம். சன் டிவியில் மாபெரும் வெற்றி பெற்ற சித்தி சீரியலின் இரண்டாம் பாகத்தின் தொடராக வெளி வரப்போகும் சீரியல் இது. இதன் எதிர் பார்ப்பும் மிகப் பெரியதாக மக்கள் மத்தியில் இருக்கிறது. சின்னத் திரையில் ராதிகாவைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்ட நிலையில், ராதிகாவின் ரசிகர்கள் இதன் மூலம் அவரை மீண்டும் வீட்டின் வரவேற்பறையில் பார்க்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

திரையின் திருவிழா
ஜீ தமிழ் டிவி, திரையுலகின் பல துறைகளை சார்ந்தவர்களின் வெற்றியை கொண்டாடும் வகையில், அவர்களில் ஒவ்வொருவருக்குமான திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகளை கொடுத்து பெரும் விழாவாக அதை கொண்டாடி மகிழ உள்ளது.

ஜனவரி மாதத்தில்
இந்த விருது வழங்கும் விழாவை வருகின்ற ஜனவரி மாதத்தில்தான் ஜீ தமிழ் டிவி கொண்டாட உள்ளது. அதற்கான தேர்வுக் குழுவில் சுஹாசினி, கரு. பழனியப்பன் உள்ளிட்டவர்கள் உள்ளனர். அதோடு ஜீ தமிழ் டிவியின் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகையர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக் கொண்டு அந்த வேலைகளை கவனித்து வருகின்றனர். தலைமைப் பொறுப்பை நிகழ்ச்சித் தொகுப்பாளர் தீபக் கவனித்து வருகிறார்.

வேறு டிவி
இந்த போட்டி களத்தில் வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. வழக்கம் போல எல்லா சானல்களும் வழக்கமான நிகழ்ச்சிகளோடுதான் இருக்கின்றன. கலர்ஸ் தமிழ் டிவி சானல் மட்டும்தான் இப்போதைக்கு புதுப்புது நிகழ்ச்சி என்று அறிமுகப்படுத்துவதில் முனைப்போடு இருக்கிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications