25 ஆண்டுகளாக "அவருடன்" லிவிங் டூ கெதர்.. அதென்ன ஊரை கூட்டி, தாலி கட்டி, டமாரம் அடித்து: பிரபல நடிகர்
சென்னை: தமிழ் பண்பாடு, இழுத்து போர்த்திக் கொண்டு, அழுதுக்கொண்டு இருக்கும் பெண்களை எனக்கு பிடிக்காது.. தைரியமான பெண்களை, சுதந்திரமான பெண்களை நான் விரும்புவேன்" என்றெல்லாம் பேட்டி ஒன்றில் பிரபல நடிகரும், இயக்குனருமான ஜி.எம். குமார் கூறியிருக்கிறார்.
பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த ஜிஎம்குமார், அறுவடை நாள் என்ற படத்தின் மூலம், டைரக்டராக மாறினார். முதல் படத்திலேயே இளையராஜா இசையில், பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்தன. ஆனால், சரியாக போகவில்லை..

இதற்கு பிறகு பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் உள்ளிட்ட சில படங்கள் டைரக்ட் செய்தாலும், அவைகளும் சரியாக போகவில்லை. ஒருகட்டத்தில் நடிகை பல்லவியை காதலித்து, லிவிங் டூகெதரில் வாழ்ந்த வந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால், இப்போதுவரை இருவருமே நண்பர்களாக இருப்பதாக ஜிஎம் குமார் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். பிறகு, பாலாவின் அவன் இவன், தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்..
கெட்ட வார்த்தை - காமம்
இந்நிலையில், Rednool யூடியூப் சேனலுக்கு ஜிஎம் அளித்துள்ள பேட்டியில், "காதல் என்ற கான்செப்ட்டே கிடையாது.. காமம் என்பதே ஒரு கெட்ட வார்த்தை.. கண், மூக்கு, வாய், இதெல்லாம் கெட்ட வார்த்தை இல்லை. ஆனால், அந்தரங்க உறுப்புகள் கெட்ட வார்த்தைகளாகிவிட்டன.. அந்தரங்க உறுப்புகளை பிரைவேட் பார்ட் என்று சொல்லிவிட்டு, அதை பயன்படுத்தினால் கெட்ட வார்த்தை என்று சொல்கிறார்கள். அதனால் நான் காதலை நம்பவில்லை. ஆனால், காமத்தை நம்புகிறேன்.
சோஷியல் செட்டப் - திருமணம்
ஆண்-பெண் நட்பை காதல் என்று சொல்கிறார்களா தெரியவில்லை. 25 வருடம் நான் ஒரு பெண்ணுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.. ஆனால், அது நிலைக்காமல் போனதற்கு காரணமே ஒருவித சலிப்புதான்.
திருமணம் என்பதே ஒரு சோஷியல் செட்டப் என்று நினைக்கிறேனே தவிர, மனிதனுக்கான விஷயம் இல்லை. 45 லட்சம் வருடத்துக்கு முன்பு மனித இனம் மேம்பட்டு வருகிறது என்று வைத்து கொள்வோம்.. அப்போது ஆப்பிரிக்காவிலிருந்து எல்லாரும் பிரிந்து போறாங்க.. பிறக்கும்போதே இது தலித் குரங்கு, இது தேவர் குரங்கு, இது நாடார் குரங்கு, இது பிள்ளை குரங்கு என போட்டோம் என்றால், இவர்கள் எல்லாம் இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்களா?
பைத்தியக்காரத்தனம்
சொந்தத்தில் திருமணம் செய்தால், ஒரு தலைமுறையிலேயே குழந்தை ஊனமாக பிறக்கிறது.. அப்படியென்றால், 45 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சாதியை எப்படி பராமரித்து வந்திருக்க முடியும்? இது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்?
ஒரே சாதியில், ஒரே மதத்தில் குழந்தையை பெத்துக்கணும்னு சொல்றாங்க.. சாதி, இனம் என்பதைவிட, முட்டாள்தனம் வேறில்லை.. தனக்கு பிடித்த நபருடன் காமம் இல்லாமல், அரேஞ்சுடு மேரேஜ்படி வலியுறுத்தும் நபரிடம் காமம் வைத்து கொள்ள சொல்வது எப்படி சாத்தியம்? இது எவ்வளவு பெரிய காமெடி?
லிவின் ரிலேஷன்ஷிப்
இவளோடுதான், அல்லது இவனோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்று தாலியை கட்டி, ஊரை அழைத்து, டமாரம் அடித்து, அவளை விட்டு அவன் போக முடியாத அளவுக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறார்கள். ஆனால், லிவின் ரிலேஷன்ஷிப்பில் அப்படியில்லை.. அது புத்திசாலித்தனத்தை பொறுத்தது.
தமிழ் பண்பாடு, இழுத்து போர்த்திக் கொண்டு, அழுதுக்கொண்டு இருக்கும் பெண்களை பிடிக்காது.. தைரியமான பெண்களை, சுதந்திரமான பெண்களை நான் விரும்புவேன்" என்றெல்லாம் ஜி.எம். குமார் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications