இரண்டாவது திருமணமா "அந்த" டாப் நடிகரின் முன்னாள் மனைவிக்கு? மாப்ளை இவர் தானா? பிரபலம் ஏதேதோ சொல்றாரே
சென்னை: பிரபல நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்ட நிலையில், இதில் ஒருவருக்கு 2வது திருமணம் நடக்க போவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து தற்போது மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி இருவருமே கடந்த 2022ம் ஆண்டு, பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர்.. இந்த விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இருவருமே, தங்கள் விவாகரத்து பற்றின பேச்சை எங்குமே பேசவில்லை..

இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.. ஆனால், "இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா" என்று, நீதிபதி கேட்டதற்கு, 2 பேருமே "எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்கள்.. இதையடுத்து, விவாகரத்து வழங்கப்பட்டு, இருவருமே அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டனர்.
விவாகரத்து: இந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்ததுமே, நடிகர் தனுஷுக்கும், பெண் மருத்துவருக்கும், திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிப்பதாக திடீரென தகவல் கசிந்தது.. அந்த பெண் மருத்துவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு, தனுஷுக்கு 2வது திருமணம் என்பது குறித்த தகவல் எதுவுமே வெளியாகவில்லை.
இதற்கு மாறாக, ஐஸ்வர்யாவுக்கு 2வது திருமணம் என்பது போல செய்திகள் கசிய ஆரம்பித்துவிட்டன.. இதுகுறித்து, King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா குறித்து சொன்னதாவது:
மீண்டும் காதல்: "தனுஷும், ஐஸ்வர்யாவும், விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.. இப்போது ஐஸ்வர்யா மீண்டும் காதல் வயப்பட்டிருப்பதாகவும், தான் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும், நடிகர்கள், அவர்களின் மனைவிகளிடமும் சொன்னாராம்.
ஆனால், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஐஸ்வர்யாவின் அம்மா, லதா லஜினிகாந்த், "நீ ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டாய்.. அந்த காதலித்தவனையே திருமணம் செய்தது தப்பாக போய்விட்டது. இப்போது நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்கள்.. உனக்கு 2 வாலிப பிள்ளைகள் இருக்காங்க..
ஏற்க முடியாது: இந்த சூழலில், காதல் திருமணம் செய்வதை நான் ஏற்க மாட்டேன்.. உனக்கு விருப்பமிருந்தால், நான் மாப்பிள்ளை பார்க்குறேன்.. நான் பார்க்கும் மாப்பிள்ளையைதான் நீ திருமணம் செய்ய வேண்டும், அவர்தான் உன் கழுத்தில் தாலி கட்டுவார்.. உனக்கு இனி காதல் திருமணம கிடையாது?" என்று கண்டிப்பாக லதா ரஜினி, தன்னுடைய மகளிடம் சொல்லிவிட்டாராம்" என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications