4 எழுத்து நடிகையை தூக்கிடுங்க.. வாங்கிய கடனால் அவதி.. பைனான்ஸ் தொகை இப்படியும் வசூலாகுமா: பிரபலம்
சென்னை: திரைத்துறையில் பைனான்ஸ் செய்வதும், வாங்கிய பணத்தை திருப்பி தருவதும் இயல்பாக நடக்கக்கூடியது.. சிலசமயம், பணத்தை வசூலிக்க விரும்பத்தகாத செய்கைகளை பைனான்சியர்கள் தரப்பில் செய்வதும் நடக்கும்.. அதுபோல பாதிக்கப்பட்டவர்கள் திரையுலகில் உண்டு என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் விரிவாகவே தெரிவித்துள்ளார்..
King 24x7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "திரைத்துறையில் பைனான்ஸ் தந்துவிட்டு, அதை வசூலிக்கும் விதம் வேறுமாதிரியாக இருக்கும்.. வங்கிகளில் கடன் வாங்கினோமானால், நேரடியாகவே நமக்கு போன் செய்து, மரியாதையுடன் நம்மிடம் பேசி பணம் கேட்பார்கள்..

பைனான்ஸ் வசூல்
குறிப்பிட்ட தேதியில் பணம் தாமதமாகும்போது, கடன் தொகையை வசூல் செய்யவே 10 பேர் வீட்டுக்கு வருவார்கள்.. உடனே அக்கம்பக்கத்தினருக்கு பயந்து கொண்டு பணத்தை எப்படியாவது புரட்டி தந்துவிடுவார்கள்.. அதுபோலவே சினிமாவிலும் உண்டு.. ஆனால், பெரிதாக யாரும் பாதிக்கப்படுவதில்லை.. காரணம், சினிமாவில் சில முக்கிய நபர்கள், சொன்னபடியே, வாங்கிய பைனான்ஸ் உரிய தேதியில் பணத்தை தந்துவிடுவார்கள்... ஆனால் சிலருக்கு படம் ஓடாதபோதுதான், இப்படியான சிக்கல்கள், நெருக்கடிகள் வந்துவிடுகிறது.
சின்னப்பா தேவர், பாலாஜி
அந்த காலத்தில் நடிகர் பாலாஜி நிறைய படங்களை எடுத்தார்.. சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டுவிடுவார்.. அதேபோல சின்னப்பா தேவரும் , சொன்ன தேதிக்கு முன்பே படத்தை ரிலீஸ் செய்துவிடுவார்.
சின்னப்பா தேவரும் பல இடங்களில் பைனான்ஸ் வாங்கி படம் எடுப்பார்.. பைனான்சுக்கு பிறருக்கு பணமும் தருவார். எப்போதுமே காலையில் 8 மணிக்கெல்லாம் 3 சீன்களை எடுத்துவிடுவது தேவரின் பழக்கமாகும்.. இல்லாவிட்டால் சொந்த தம்பியாகவே இருந்தாலும் பச்சை பச்சையாக திட்டி தீர்த்துவிடுவார்..
சிலசமயம் எம்ஜிஆரையே மறைமுகமாக திட்டுவாராம் தேவர். இப்படியெல்லாம் சின்னப்பா தேவர், நேரடியாகவும், மறைமுகமாகவும் திட்டுவதற்கு காரணமே, சொன்ன தேதியில் படத்தை முடிக்க வேண்டும் என்பதால்தான்.
டிட்டோ திருமலை சீன்
ஆனால், இப்போதெல்லாம் சினிமாவில் சொன்னபடி பைனான்ஸ் பணத்தை தராவிட்டால், தயாரிப்பாளர்களின் மனைவிகளை தூக்கி செல்வது அல்லது நடிகைகளை தூக்கி செல்வது போன்ற செயல்களும் அரிதாக நடப்பதுண்டு..
திருமலை படத்தில் இப்படியொரு சீன் வரும்.. திருமலை வரும்வரை நாங்கள் போக மாட்டோம் என்று சொல்லி, ரவுடிகள் சிலர், கவுசல்யா வீட்டிலேயே உட்கார்ந்து தண்ணி அடிப்பார்கள், சீட்டு விளையாடுவார்கள்.. அதுபோல நிஜத்திலும் நடக்கும்..
பெரிய பெரிய கம்பெனிகள், அல்லது அடிக்கடி படம் எடுக்கும் கம்பெனிகள், எப்படியாவது உரிய நேரத்தில் பணத்தை புரட்டி தந்துவிடுவார்கள். ஆனால், சிலரால் இது முடியாமல் போகும், படமும் தோல்வியடைந்து விடுவதால், பணத்தை எப்படி தருவது என்று தெரியாமல் விழிப்பார்கள்.. இதுபோன்ற நேரத்தில்தான், கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து ஏழெட்டு பேர், நேரடியாகவே கிளம்பி தயாரிப்பாளர் வீட்டுக்குள் நுழைந்து, .. நடுவீட்டிலேயே உட்கார்ந்து தண்ணி அடித்து, சீட்டு விளையாடுவார்கள்..
நடுவீட்டில் சீட்டாட்டம்
குடும்பத்தில் உள்ள பெண்கள், இவர்களை பார்த்து பயந்தே போவார்கள்.. ஆனால், பெண்கள் உட்பட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த தொந்தரவும் தர மாட்டார்கள்.. கடன் தொகையை திருப்பி தரும்வரை வீட்டை விட்டு போக முடியாது என்று சொல்லி நெருக்கடி தருவார்கள்.. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இவர்களை பார்த்தால், தங்களது மானம் மரியாதையே போய்விடுமே என்று பயந்துபோன குடும்பத்தினரும், இதற்காகவே எங்காவது அவசர அவசரமாக கடனை வாங்கி தந்துவிடுவார்கள்..
4 எழுத்து நடிகை
சினிமாவில் 4 எழுத்து பிரபல நடிகைக்கும் இப்படியொரு பிரச்சனை இருந்ததாக சொல்வார்கள்.. அந்த நடிகையின் கணவர் ஒரு இயக்குனர் என்பதால், இருவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுத்திருந்தனர்.. ஆனால் படம் ஓடவில்லை.. 3 கோடி ரூபாய் நஷ்டமடைந்ததுடன், 1 கோடி ரூபாய் கடனுக்கும் ஆளானார்கள்..
பணத்தை திருப்பி தர முடியாவிட்டால் நடிகையை தூக்கிடுங்க என்று பைபான்சியர் தரப்பிலிருந்து சொல்லி உள்ளனர். இதைக்கேள்விப்பட்ட நடிகை, உடனே அந்த பைனான்சியரிடம் பேசி டைம் வாங்கியதுடன், உடனே ஒரு சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமானார்..
அதுவரை அந்த சீரியலில் நடிக்க அழைத்தும்கூட, ஒப்புக் கொள்ளாமல் இருந்தாராம் நடிகை.. திடீரென பைனான்சியர் தரப்பிலிருந்து நெருக்கடி வரவும்தான், அந்த சீரியலில் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்து, ஷூட்டிங் துவங்கினார்.. இதற்காக பணத்தையும் சீரியல் நிறுவனத்திடமிருந்து வாங்கி, அந்த கடனை அடைத்தார் நடிகை.. ஒரு தயாரிப்பாளர் தற்கொலையே செய்துகொண்டார்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications