படையப்பா நீலாம்பரி யாருனு கேட்ட ரஜினி.. "அம்மனுக்கு" கொட்டிய பணம்.. அசத்தும் 55 வயது ரம்யா கிருஷ்ணன்
சென்னை: எந்த கேரக்டர் என்றாலும் அசத்திவிடுவார்.. டைரக்டர்கள், நடிகர்கள், என அனைவரிடமும் ஜாலியாக, நட்புடன் பழகுவார்.. ஈகோ இல்லாதவர் ரம்யா கிருஷ்ணன்.. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். அத்துடன் ரம்யா கிருஷ்ணன் படங்களை பற்றியும் பேசியிருக்கிறார்.
Kingwoods News என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "நடிகர் சோ - வின் உறவினர் என்றாலும், அவர் மூலமாக சினிமாவில் நடிக்க வரவில்லை ரம்யா கிருஷ்ணன்.. தனிப்பட்ட முறையில்தான் சினிமாவுக்கு நடிக்க வந்தார்.. மனசு ரிலாக்ஸாக வைத்து கொள்ளும், ரம்யா கிருஷ்ணன் இன்றுவரை இளமையாகவே இருக்கிறார்..

கிளாமர் கலந்த வில்லி
டைரக்டர் ராகவேந்திராதான், ரம்யா கிருஷ்ணனை தெலுங்கில் அறிமுகப்படுத்தினார்.. ராகவேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர் கிருஷ்ணவம்சி.. இப்போது கிருஷ்ணவம்சி, ரம்யா கிருஷ்ணனின் கணவர் ஆவார்.
ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் பெயர் வாங்கி தந்த படம் படையப்பா.. ரம்யா கிருஷ்ணன் இல்லை என்றால், அந்த படமே இல்லை.. ஒரு கிளாமரான பெண் வில்லியாக மாற வேண்டும், அப்படியே அவர் வில்லியாக மாறினாலும், அழகாக இருக்க வேண்டும்.. அவ்வளவு அழகுவாய்ந்த பெண்ணை ஹீரோ வேண்டாம் என்று சொல்வதற்கு நியாயமான காரணமும் இருக்க வேண்டும். இதுதான் படையப்பா படத்தின் சேலஞ்சிங்கான விஷயம்.
பவர்ஃபுல் நீலாம்பரி
இந்த கதையை கேட்ட ரஜினி, இவ்வளவு பவர்புல் நீலாம்பரி கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்க போகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன் என்று சொல்லவும், உடனே ஓகே சொன்னாராம் ரஜினி.
பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு வயதான கெட்டப்பில் மேக்கப் டெஸ்ட் எடுத்து பார்த்ததுமே, அனைவருக்கு திருப்தியை தந்துள்ளது. கவர்ச்சியும், வில்லியும் இருக்க வேண்டும்.. அதேசமயம் கொடூரமாகவும் இருக்கக்கூடாது என்பதால், அந்த கேரக்டரில் நன்றாக நடித்திருந்தார். இன்றுவரை நீலாம்பரி கேரக்டர் பேசப்பட்டு வருகிறது...
அதேபோல, பாகுபலி படத்தை தூக்கி பிடிக்க காரணமாக இருந்ததே ரம்யா கிருஷ்ணன்தான்.. ராஜமாதாவுக்குரிய கம்பீரம், அழகுடன் வேறு நடிகைகள் யாரும் பொருத்தமாகவில்லை.. பலர் அழகாக இருந்தாலும் கம்பீரம் காணப்படவில்லை.. விரிந்த தோள்களில் 3 குழந்தைகளையும் ஒன்றாக தாங்கி பிடிக்க, ரம்யா கிருஷ்ணனால்தான் முடிந்தது.. பாகுபலி படம் மூலம் சர்வதேச அளவில் அறியப்பட்டார்..
அத்தனையிலும் அம்மன்
பஞ்சதந்திரம் படதத்தில் செக்ஸியாகவும், காமெடியாகவும் பேசி நடித்திருப்பார்.. அம்மன் படத்தில் பார்த்ததுமே கையெடுது கும்பிடுவது போல இருப்பார்.. அம்மன் படம் தெலுங்கில் வந்தபோது, சூப்பர் குட் பிலிம்ஸில் அந்த படத்தை குறைந்த விலைக்கு வாங்கி தமிழில் ரிலீஸ் செய்தனர்.. ஆனால், அந்த படத்துக்கு வசூல் கொட்டியது.. உடனே அதே பேட்டர்னில் 8 அம்மன் படங்களுக்கு மேல் தமிழில் வந்தது.. அத்தனையிலும் அம்மனாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.
எந்த கேரக்டர் என்றாலும் அசத்திவிடுவார்.. டைரக்டர்கள், நடிகர்கள், என அனைவரிடமும் ஜாலியாக, நட்புடன் பழகுவார்.. ஈகோ இல்லாதவர் ரம்யா கிருஷ்ணன்.. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன்" என்று தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications