ஏ கோபி எவ்வளவு தைரியம் இருந்தா?அரங்கத்தில் கேள்வி கேட்டு அசிங்கப்படுத்திய பெண்..மிரண்டு போன கோபிநாத்
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத்தை சின்னத்திரை நடிகை ஒருவர் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னிடம் அந்த வார்த்தையை கேட்ப என கேட்டு மிரள வைத்திருக்கிறார்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
90ஸ் சீரியல்கள் நடிகர்களுக்கும் 2k சீரியல் நடிகர்களும் பங்குபெறும் நீயா நானா நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த வார நீயா நானா நிகழ்ச்சி ப்ரோமோவில் சீரியல் நடிகை ஒருவர் கோபிநாத்திடம் கேட்ட கேள்வியை பார்த்து பயந்து போன கோபிநாத் முழித்துக் கொண்டிருப்பதை தற்போது நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

மாடர்ன் நாட்டாமை
கோர்ட் போட்ட நாட்டாமை என்று இணையத்தில் செல்லமாக ரசிகர்களால் கலாய்க்கப்படும் ஒரு நபராக இருப்பவர்தான் கோபிநாத். இவர் இதற்கு முன்பு எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருந்தார். ஆனாலும் இவருக்கு என்று பெரிய அளவில் ஹிட் அடித்தது என்றால் அது நீயா நானா நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் நடுநிலை தவறாமல் இவர் பேசும் வார்த்தைகள் பலரையும் கவர்ந்திருக்கிறது. இவருடைய நீயா நானா நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அதிகமானோர் காத்திருக்கின்றனர். தன்னுடைய காமெடி கலந்த கராரான குணத்தோடு இவர் பேசும் வார்த்தை குபீரென பலரையும் சிரிக்க வைத்து விடுகிறது என்று கருத்து கூறி வருகின்றனர்.

வித்தியாசமான தொகுப்பாளர்
நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக தொகுத்து வழங்க முடியாது என்று கூறும் அளவிற்கு கோபிநாத் அனைவருடைய மனதையும் கவர்ந்து இருக்கிறார் .கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானாரா? அல்லது இவரால் இந்த நிகழ்ச்சி பிரபலம் ஆனதா என்று பிரிக்க முடியாத வகையில் தான் இருந்து வருகிறது. தொகுப்பாளர் என்றால் நான் வித்தியாசமானவர் என்று கோர்ட் சூட்டோடு இவர் கெத்தாக இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே தொகுத்து வழங்கி வருகிறார்.

வெளிச்சத்துக்கு வந்த பாசம்
கோபிநாத் தொகுத்து வழங்கிய நீயா நானா நிகழ்ச்சியில் பல விஷயங்கள் சமூகத்தில் நடக்கும் அவலங்களை உரித்து காட்டுவதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில நிகழ்வுகள் யாரும் எதிர்பார்க்காத அளவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு தந்தை மகளுடைய பாசம் நீயா நானா நிகழ்ச்சியின் மூலமாக வெட்ட வெளிச்சமாகி பலருக்கும் புரிய வைத்தது. அம்மா மகளுக்கும் இருக்கும் பாசத்திற்கும், அப்பா மகளுக்கு இருக்கும் பாசத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் எவ்வளவு பிணைப்பு என்பதை இந்த நிகழ்ச்சி வெளிக்காட்டி இருந்தது என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் அதிகமான பிரபலங்களும் கோபிநாத்தை பாராட்டி இருந்தனர்.

என்னம்மா மிரட்டுறாங்க
இந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகர்களுக்குள் நீயா நானா என வாக்குவாதங்கள் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ் சீரியல் நடிகர்கள் மற்றும் 2k கிட்ஸ் நடிகர்கள் மோதிக் கொள்கின்றனர். அதில் நாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் இரு தரப்பு நடிகர்களும் தங்களுடைய நடிப்பை பின்னி பெடல் எடுத்து அந்த அரங்கத்தையே அலற வைத்து இருக்கின்றனர். அப்போது ஒரு நடிகை, "ஏ கோபி உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என்கிட்டயே நீ அந்த வார்த்தையை கேட்ப? "என்று மிரட்டும் தோணியில் பேசியதும், ஒரு நிமிடம் மிரண்டு போனது கோபிநாத் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களும் தான். அதிலும் அல்டிமேட் ஆக கோபிநாத் அந்த நடிகையின் வார்த்தையை கேட்டு செய்த கண் அசைவு பலரையும் சிரிக்க வைத்து விட்டதாக இணையத்தில் கருத்து கூறி வருகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications