அழகுடா தங்கம்..! அம்மாவுக்கே அம்மாவாக மாறிய குழந்தை.. நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் மருத்துவர்கள் பங்கு பெற்ற எபிசோடு ஒளிபரப்பானது.

அதில் ஒரு குழந்தை தன்னுடைய அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாதது பற்றி மருத்துவரிடம் கேள்வி கேட்டு இருக்கிறது.

அந்த குழந்தை கேட்ட கேள்வி கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

A child who consulted a doctor for his mother: Neeya Naana Show April 2023 April 9th Episode Highlights

அம்மா பாசம்: அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது சார் என்று சொல்வார்கள் ஆனால் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு குழந்தை தனக்கு தன்னுடைய அம்மாவை எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை உலகத்திற்கே வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி எபிசோட் சுவாரசியமான நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.

அம்மாவிற்கு இருமல்:கலகலப்பாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியில் கடைசியில் கோபிநாத் இதுவரைக்கும் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் அம்மா அப்பா கூட்டிட்டு போவாங்க, ஆனா உங்க அம்மா அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று நீங்க எப்பவாவது நோட் பண்ணி இருக்கீங்களா? அப்படி ஏதாவது சந்தேகம் இருந்தா, நீங்க டாக்டரிடம் கேட்கலாம் என்று சொல்ல, ஒரு குழந்தை எந்திரிச்சு என்னுடைய அம்மாவுக்கு இரவு மூச்சு திணறல் வருகிறது. இருமி இருமி வாமிட் பண்றாங்க. அவங்களுக்கு தூக்கமே வரல என்று மழலைக் குரலில் கூறுகிறது.

A child who consulted a doctor for his mother: Neeya Naana Show April 2023 April 9th Episode Highlights

அம்மாவாக மாறிய மகள்:கோபிநாத் நீங்க மருத்துவரிடம் பேசலாம் என்று சொல்ல, அந்த குழந்தை அம்மாவை மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு செல்கிறது. பின்பு மருத்துவர் அந்த குழந்தையிடம் அம்மாவுக்கு ராத்திரி மட்டும்தான் இருமல் இருக்கா? அல்லது பகலிலும் இருக்கிறதா? என்று கேட்கிறார். பகலிலும் இருக்கு என்று அந்த குழந்தை சொல்ல, இரும்பினால் சளி வருகிறதா? என்று கேட்க ஆமாம் என்று அந்த குழந்தை சொல்கிறது. பிறகு ராத்திரி தூங்குன பிறகு இருமல் ரொம்ப வருகிறதா? என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறது. நெஞ்சு எரிச்சல் ஏப்பம் வருகிறது என்று சொல்லி இருக்காங்களா? என்று டாக்டர் கேட்க சொல்லி இருக்காங்க என்று அந்த குழந்தை கூறுகிறது.

A child who consulted a doctor for his mother: Neeya Naana Show April 2023 April 9th Episode Highlights

அம்மாவின் பதில்: அதைப் பார்த்து வியந்து போன கோபிநாத் உங்க பொண்ணு அவங்க கேட்பது எல்லாம் பதில் சொல்றாங்க உங்களை தினமும் பார்த்து தான் பதில் சொல்றாங்களா? எப்படி என்று கேட்க, அதற்கு அந்த குழந்தையின் அம்மா, ஆமாம் வீட்டில் அவங்கதான் என்னை பாக்குறாங்க என்று சொல்கிறார். பிறகு கோபிநாத் நீங்க வேற ஆஸ்பிட்டலுக்கு போய் பாக்கறீங்களா? என்று கேட்க ஆமா போய் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் என்று அந்த அம்மா சொல்கிறார்.

A child who consulted a doctor for his mother: Neeya Naana Show April 2023 April 9th Episode Highlights

குழந்தையின் கனவு: பிறகு கோபிநாத் அம்மா இருமும் போதெல்லாம் உங்களுக்கு என்ன தோணும் என்று கேட்க, அம்மாவிற்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணும் என்று அந்த குழந்தை கூறுகிறது. பிறகு அம்மாவுக்கு சீக்கிரமா சரியாயிடும் என்று கோபிநாத் கூறி, நீங்க பெரிய ஆளான பிறகு அம்மாவுக்கு என்ன செய்வீங்க என்று கேட்க, நான் அம்மாவிற்கு பட்டுப் புடவை எடுத்து கொடுப்பேன், நகை வாங்கிக் கொடுப்பேன். அவங்க கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன் என்று அந்த குழந்தை மழலை குரலில் பேசுகிறது. இதை தற்போது சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+