சிவகார்த்திகேயனால் கோபத்தில் பிரபலம் கேட்ட கேள்வி..நீங்களே இப்படி பண்ணலாமா?அவங்க பாவம் இல்லயா?
சிவகார்த்திகேயன் போன்ற கதாநாயகர்களே பாடல்களையும் எழுதுவதால் பல எழுத்தாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, தமிழும் அழிந்து வருவதாக பிரபல பத்திரிகையாளர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக சினிமாக்களிலேயே இந்திய சினிமாக்களில் தான் பாடல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இருந்து வருகிறது. அதுவும் தமிழ்நாட்டில் பாடல்களை வைத்தே ஆட்சியைப் பிடித்த கதைகளும் இருக்கிறது.
அந்த அளவிற்கு தமிழக மக்கள் மத்தியில் சினிமா பாடல்களுக்கென்று ஒரு தனி இடம் உண்டு.ஒரு காலத்தில் பட்டு கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன்,வாலி போன்ற குறிப்பிடதக்க கவிஞர்கள் மட்டுமே இருந்தாலும் எக்காலமும் நிலைத்திருக்கும் பல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளனர்.
ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை, தற்போது பல கவிஞர்கள் தங்களது திறமையை பல படங்களில் நிரூபித்து வந்து கொண்டிருக்கின்றனர்.பலர் தங்களை நிரூபிப்பதற்கு இன்னமும் வாய்ப்பிற்காக பல இசையமைப்பாளர் வீடுகளில் காத்திருக்கின்றனர். நிலைமை இப்படி இருக்க தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர் கொஞ்ச நாட்களாக தங்கள் திறமைகளை காட்டுவதற்காக திரைப்படங்களில் பாடல்களையும் எழுத ஆரம்பித்திருக்கின்றனர்.
அதிலும் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களையும் தாண்டி பீஸ்ட், ஜெய்லர் போன்ற பிற நடிகர்கள் படங்களிலும் பாடல்களை எழுதி வருகிறார். அந்தப் பாடல்களையும் பல விதங்களில் ப்ரொமோட் செய்து எப்படியாவது ஹிட் செய்தும் விடுகின்றனர். எனவே மக்களும் தற்பொழுது அது மாதிரியான பாடல்களை எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.

இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் ,பல கவிஞர்களுக்கு எழுதுவதை தவிர வேறு தொழில் தெரியாது, ஆனால் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் நடிப்பு மற்றும் தயாரிப்பில் பெரிய அளவில் சம்பாதிப்பதுடன் நிறுத்தி விடாமல் இவ்வாறு பாட்டு எழுதுவதையும் செய்து வருவது பல கவிஞர்களின் வாய்ப்பை கெடுப்பதாய் இருப்பதாகவும்,
சிவகார்த்திகேயன் போன்றோர் எழுதும் பாடல்களின் வரிகள் ஏனோ தானோ என்று இருப்பது தமிழ் பட பாடல்களில் இதுவரை இருந்த வந்த மொழி வளமையை மழுங்கடித்து விட்டதாகவும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.ஆனால் சிவகார்த்திகேயன் இது குறித்து கருத்து தெரிவிக்கும் பொழுது,தான் படங்களில் பாடல் எழுதுவதால் வரும் வருமானத்தை மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களது குடும்பத்திற்கு வழங்கி விடுவதாக கூறி வருவது சற்று ஆறுதலான விஷயம் என்றும் அந்த பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications