ரஜினி- சிவாஜி- சுந்தரராஜன் நடித்த அந்த படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா? கலக்கிய மைக்கேல் டிசோசா!
சென்னை: வில்லனாக சுந்தரராஜன் நடித்த நான் வாழ வைப்பேன் என்ற படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியில் இப்படி ஒரு ட்விஸ்டா என்ற அளவுக்கு காட்சிகள் நகர்ந்துள்ளது.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: 'நான் வாழவைப்பேன்' படத்தில் வில்லன் சுந்தர்ராஜனை ரஜினி க்ளைமேக்ஸில் மடக்குவார். சுந்தர்ராஜன் சுட்டதால் ரஜினிக்கு குண்டடி பட்டு விடும். அப்போ சிவாஜி போலீசை கூப்பிட போய்விடுவார். ரஜினி கேரக்டர் மைக்கேல் டிசோசா.

சுந்தர்ராஜனை உட்கார வச்சு அவர் எதிரே நீட்டிய துப்பாக்கியோடு ரஜினி அசைய விடாமல் வச்சிருப்பார். சுந்தர்ராஜன் சைலண்டாக ரஜினி சாகும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார். ரஜினியோட உயிர் கொஞ்சம் கொஞ்சமா போய்க் கொண்டிருக்கும். கண்கள் செருகும். அந்த நேரத்துக்காக காத்திருப்பார் சுந்தர்ராஜன்.
எதிர்பார்த்தது போல ரஜினி உயிர் பிரிய சுந்தர்ராஜன் எழுந்து வந்து அவரை உதைப்பார். அதை வைத்து சிவாஜியை சுடும் ரஜினிக்கு குண்டடி கிடைக்கும். அந்த துப்பாக்கி யாருடையதுன்னா சுந்தர்ராஜனுடையது. சந்திப்பு இந்த இடத்தில் என உறுதி ஆனதால் சுந்தர்ராஜன் முதல் நாளே வந்து துப்பாக்கியை ஒளித்து வைப்பார். இப்போ ஒரு ப்ளாஷ்பேக்.
இதில் சிவாஜி, ரஜினியோட துப்பாக்கியை எடுத்திடுவார். அதை வைத்து ரஜினியையே மிரட்டுவார். ரஜினி அசால்ட்டாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்து விட்டு "இந்தக் கொலை விஷயமா எனக்கு சில விஷயங்கள் தெரியும். அதை உன்கிட்ட சொல்லணும்னா என் துப்பாக்கியை என் கிட்ட கொடு" என்பார்.
சிவாஜி துப்பாக்கியை கொடுத்ததும் அதை சுட்டுக்காட்டி விட்டு "நான் என் துப்பாக்கில தோட்டாவே போடுவதில்லை" என்பார். திரைக்கதை உத்திப்படி ரஜினி இந்த தோட்டா இல்லாத துப்பாக்கியை வைத்து தானே மிரட்டி இருக்க வேண்டும். தோட்டா இல்லை என ரஜினிக்கு தெரியும். சுந்தர்ராஜனுக்கு தெரியாது. ரஜினி உயிர் பிரிந்ததும் சுந்தர்ராஜன் துப்பாக்கியை எடுத்துப் பார்க்க அதில் தோட்டாக்களே இல்லை. அப்படி திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சுவையான க்ளைமேக்ஸ் அமைந்திருக்கும் சண்டைக்காட்சிகளோடு.
ஏனோ திரைக்கதை ஆசிரியர் ஒரு லீட் வசனத்தை முன்பே கொடுத்து விட்டு பின் அதை மறந்து போய் விட்டார்.... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications