சுரைக்காய் வீடியோ வெளியிட்ட சிரஞ்சீவி.. கோபப்பட்ட அல்லு அர்ஜுன் ரசிகாஸ்.. அங்குதான் ட்விஸ்ட்
ஹைதராபாத்: தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றே நாடே உற்று நோக்கம் பேசுபொருளாக மாறியுள்ளார். அவர் நடித்த 'புஷ்பா-2' திரைப்படத்தின் சிறப்பு திரையிடலின் போது, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சந்தியா திரையரங்கிற்கு சென்றதால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ரேவதி என்று ஒரு பெண் உயிரிழந்தார் மற்றும் ஒரு குழந்தை பலத்த காயமடைந்தது. இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் சந்தியா திரையரங்க நிர்வாகத்தின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தெலுங்கானா அரசியலிலும் புயலைக் கிளப்பியது. தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, சட்டமன்றத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இனிமேல் தனது ஆட்சியில் சிறப்பு திரையிடல்கள் மற்றும் டிக்கெட் விலை உயர்வுகளுக்கு அனுமதி கிடையாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரேவந்த் ரெட்டியின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல்லு அர்ஜுன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதனால் இந்த சர்ச்சை மேலும் பெரிதானது. அவர் கூறியது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் போலீஸ் தரப்பில் வீடியோ வெளியிடப்பட்டது. ரேவந்த் ரெட்டி விரித்த வலையில் அல்லு வந்து மாட்டிக்கொண்டு மேலும் பெயரைக் கெடுத்தார்.
அல்லு அர்ஜுனின் அத்தை கணவர்தான் சிரஞ்சீவி. ஆனால் இந்த பிரச்சினைக்கு முன்பு அல்லு குடும்பத்தோடு அவருக்கு நெருக்கம் இல்லை. அல்லு அர்ஜுன் சிறையிலிருந்தபோது அவரது வீட்டுக்கு சிரஞ்சீவி சென்று ஆறுதல் கூறினார். அதே மாதிரி, ரிலீசான பிறகு சிரஞ்சீவி வீட்டுக்கு அல்லு அர்ஜுன் போனார். சிரஞ்சீவி மகன் ராம் சரண் கூட அல்லு அர்ஜுனை கண்டுகொள்ளாமல்தான் இருந்தார்.
இந்த சூழ்நிலையில், சிரஞ்சீவி தனது தோட்டத்தில் விளைந்த சுரைக்காய் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனைவியின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவது சரியா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் சிலர், அல்லு அர்ஜுன் மெகா ஸ்டார் குடும்பத்துடன் முரண்டுபிடித்து வந்தவர்கள் என்பதால், சிரஞ்சீவி அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அவசியமில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சிரஞ்சீவியின் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட் இருந்தது. இது 3 வருடம் முன்பு எடுத்த வீடியோவாம். சிரஞ்சீவி குடும்பத்திற்கும் அல்லு குடும்பத்திற்கும் தீ மூட்ட இப்படி சில விஷமிகள் பரப்புகிறார்களாம்.
சுருக்கமாகக் கூறினால், 'புஷ்பா-2' சிறப்பு திரையிடலின் போது ஏற்பட்ட நெரிசல், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்பு, அரசியல் விமர்சனங்கள் மற்றும் சமூக வலைத்தள கருத்துக்கள் என அல்லு அர்ஜுனைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications