A.R.Rahman: எனது முன்னாள் மனைவி சாயிரா பானுவிடம் மன்னிப்பு கேட்கணும்! மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான்!
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது முன்னாள் மனைவி சாயிரா பானுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மன்னிப்பாயா என்ற பாடலுக்கு அவர் இசையமைத்தது குறித்து கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் 13 வயது முதலே சினிமாவில் இருக்கிறேன். அதே ஸ்கிரீனை பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏன் சினிமா இப்படியே இருக்கிறது. என்ன செய்யலாம் என யோசித்தேன்.

அந்த நேரத்தில்தான் விர்சுவல் ரியாலிட்டியில் சில மாற்றம் செய்ய முடியும் என நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். நான் இதுகுறித்து என் முன்னாள் மனைவி சாய்ராவிடம் கதையை உருவாக்கி என்னிடம் சொன்னார்.
அப்பா அம்மா
அதாவது ஒரு சின்ன பெண்ணின் அப்பா அம்மாவை கொலை செய்துவிட்டார்கள். அந்த பெண் வாசனையை வைத்து தாய், தந்தையை கொல்பவர்களை கண்டுபிடிப்பதுதான். அதன் பிறகு என் ஸ்டுடியோவில் என் மகள், அசிஸ்டென்ட்டுகளை வைத்து டம்மியாக ஒரு படத்தை எடுத்தோம்.
டைரக்ஷன் இவ்வளவுதானா
அப்போது டைரக்ஷன் இவ்வளவு தானா என்பது குறித்து தைரியத்தை வளர்த்தோம். இதற்கு முன் நான் டைரக்ஷன் பண்ணது இல்ல, ஆனால், தியேட்டர் அனுபவம் இருந்தது. இருந்தாலும் இன்னும் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக ஆக்டிங் ஒர்க் ஷாப், ரைட்டிங் ஒர்க் ஷாப் போய் அனைத்தையும் நன்றாக பார்த்து தெரிந்து கொண்டேன்.
நண்பர்கள்
அப்போது தான் என் நண்பர்கள் நீயே பண்ணு என்று சொன்னதால், நானே செய்துவிட்டேன் என்றார். அப்போது மன்னிப்பாயா பாடல் குறித்து தொகுப்பாளர் திவ்யதர்ஷினி கேட்ட போது அனைவரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்க வேண்டும், என் குடும்படம், என் மகன், மகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மனைவி சாயிரா
குறிப்பாக என் முன்னாள் மனைவி சாய்ராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். பின் உசுரே நீ தானே பாடல் குறித்து பேசிய அவர், என் உசுரே என ரசிகர்கள் தான், அவர்கள் இல்லை என்றால், என் வண்டி ஓடாது, ஒவ்வொரு ரசிகரும் என்னை குடும்பத்தில் ஒருத்தராக நினைத்து அன்பும், ஆதரவும் காட்டுகிறார்கள் என்றார்.
ஆஸ்கர் நாயகன்
இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என ஏ.ஆர். ரகுமானை ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். ரோஜா படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்த ரகுமான் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பது வரை சென்றுவிட்டார்.
பிரிந்தது ஏன்
இவரும் தனது மனைவி சாயிரா பானுவும் தற்போது பிரிந்திருக்கிறார்கள். விவாகரத்து அறிவித்திருக்கிறார்கள். சாயிரா அறிவித்தது ரகுமானுக்கே ஷாக்கிங்காக இருந்தது. சாயிரா பிரிந்ததும் ரகுமானை பலர் தவறாக விமர்சனம் செய்ய தொடங்கினர்.
விமர்சிக்கக் கூடாது
அப்போதுதான் தனக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் தற்போது அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாக சாயிராவே தெரிவித்திருந்தார். மேலும் ரகுமான் ஒரு ஜெம் என்றும் அவரை யாரும் தவறாக விமர்சிக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் தான் இன்னும் விவாகரத்து பெறாததால் தன்னை யாரும் முன்னாள் மனைவி என குறிப்பிட வேண்டாம் என்றும் சாயிரா கேட்டுக் கொண்டார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ரகுமான்.












Click it and Unblock the Notifications