யாரு அனிருத் எனக்கு போட்டியா? ஏ.ஆர்.ரகுமான் சொன்ன தக் லைப் பதில்!
சென்னை: அனிருத், ஹாரீஸ் ஜெயராஜ், சாய் அபயங்கர் ஆகியோர் மீது பொறாமையா என இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்பதை பார்க்கலாம்.

ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் தக் லைப் படமானது வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் ஜிங்குசா ஜிங்கு ஜிங்குசா என்ற பாடல் பிரபலமானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தக் லைப் படத்தை விளம்பரப்படுத்த ஏ.ஆர்.ரகுமான் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஹாரீஸ், அனிருத், சாய் அபயங்கர் உள்ளிட்ட பலர் உங்களிடம் இருந்து சென்று பெரிய இசையமைப்பாளராகியிருக்கிறார்கள்.
அதில் உங்களுக்கு சந்தோஷமா இல்லை பொறாமையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஏ.ஆர்.ரகுமான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு குறைவாக படங்கள் செய்கிறோமோ அவ்வளவு திறமையாக இசையமைக்க முடியும்.
நிறைய பேர் இல்லையென்றால் என்னிடம் வருவார்கள். முடியாது என சொன்னால் படம் பண்ண மாட்டேன் என்கிறார் என சொல்வார்கள். அது இப்போது முடியாது. ஹாரீஸ், அனிருத், சாய் அபயங்கர் எல்லாம் இசையமைக்கும் போது எனது படங்களுக்கு இசையமைக்க இன்னும் அதிக நேரம் கிடைக்கிறது. அதனால் நிறைய தரமான இசையைக் கொடுக்க முடிகிறது என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு ஏ.ஆர்.ரகுமான் பேட்டி அளித்திருந்தார். அவரிடம் மன்னிப்பாயா பாடல் குறித்து சொல்லுமாறு தொகுப்பாளினி கேட்டிருந்தார். அதற்கு ரகுமான், நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். என் குடும்பம், என் மகன், மகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
குறிப்பாக என் முன்னாள் மனைவி சாய்ரா பானுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ரகுமான் தெரிவித்தார். உசுரே நீ தானே என்ற பாடல் குறித்து ரகுமானிடம் கேட்ட போது, என் உசுரே என் ரசிகர்கள்தான். அவர்கள் இல்லாவிட்டால் எனக்கு வண்டி ஓடாது. ஒவ்வொரு ரசிகரும் என்னை குடும்பத்தில் ஒருத்தராக நினைக்கிறார்கள்.
ரோஜா படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்த ரகுமான் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார். தக் லைப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஏ.ஆர். ரகுமானை விவாகரத்து செய்வதாக சாயிரா பானு கூறியுள்ளார்.
அவர் உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை எடுக்க வேண்டியுள்ளதால் பிஸியாக இருக்கும் நிலையில் தன்னை ரகுமானால் பார்த்துக் கொள்ள இயலாது, அவருக்கு தொந்தரவு தர வேண்டாம் என்பதற்காக இந்த பிரிவை விரும்புவதாக சாயிரா தெரிவித்தார். சாயிரா விளக்கும் வரை, ஏ.ஆர்.ரகுமானுக்கு பெண் இசைக்கலைஞருடன் தொடர்பு என இல்லாத ஒன்றை சிலர் இட்டுக்கட்டி பேசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications