Vanathai pola: துளசியின் குழந்தை கெக்கபுக்கேனு சிரிச்சினே பிறக்கணுமாம்.. நியாயம் வேண்டாமா சின்ராசு?
சென்னை: வானத்தை போல சீரியலில் துளசிக்கு பிறக்க போகும் குழந்தை பிறக்கும் போது சிரித்துக் கொண்டே பிறக்க வேண்டுமாம்... சீரியல் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
சினிமாவில்தான் ஹீரோயிசத்தை காட்டுவதற்காக ஓடும் ரயிலின் மேல் ஹீரோ ஓடுவதும், மலையில் இருந்து கீழே விழுந்தாலும் சாகாமல் இருப்பதும், காரை அலேக்காக தூக்குவதும் என மாஸ் காட்டுவார்கள். இதெல்லாம் நிஜத்தில் சாத்தியமா என்றால், இல்லை.

இது இப்படியிருக்க, சீரியல்களிலும் தற்போது சினிமா போல் காட்சிகள் அமைக்கப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கிற்காக நிறைய அபத்தங்கள் நடக்கின்றன. சினிமாவை போல் சீரியல்களிலும் லிப் டூ லிப், முதலிரவு காட்சிக்கான பாடல், மெல்லிய புடவையை கட்டிக் கொண்டு ரொமாண்டிக் நடனம் ஆடுதல் என வரிசையாக அதிர வைக்கின்றன.
இது போதாகுறைக்கு, சண்டை காட்சிகள் எல்லாம் நடக்கின்றன. அதிலும் விஜயசாந்தி போல் சீரியல் ஹீரோயின்களும் சண்டை காட்சிகளில் நடிக்கிறார்கள். அதிலும் ஒரு பெண் 10 ஆண்களை அடித்து அவர்களை எழுந்திருக்க விடாமல் செய்கிறாராம். இப்படியெல்லாம் சீரியல்களில் கதைகளம் நகர்கின்றன. சீரியலில் நாளைக்கு ஒரு நிகழ்வு நடப்பதாக கதை இருந்தால் அது 15 நாட்கள் கழித்துதான் அந்த "நாளையே" வரும்.
இப்படி பல காட்சிகள் இருக்க மருத்துவ உண்மையையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் நேற்று ஒரு சீரியலில் வசனம் இருந்தது. அதாவது வானத்தை போல சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. அண்ணன்- தங்கைக்கு இடையே நடக்கும் பாச போராட்டம், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதற்கான தீர்வு உள்ளிட்டவைதான் இந்த கதை களம். இதில் நடிகர் ஸ்ரீகுமார்- சின்ராசு எனும் அண்ணன் கேரக்டரிலும் மான்யா ஆனந்த் துளசி எனும் தங்கை கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலை இயக்குநர் ஆர்.கே. இயக்குகிறார். நேற்று ஒளிபரப்பான காட்சியில் சின்ராசும் அவருடைய மனைவி பொன்னியும் முதலிரவு அறையில் பேசிக் கொள்கிறார்கள். அப்போது சின்ராசு தனது தங்கைக்கு பிறக்க போகும் குழந்தையை பற்றி கூறுகிறார். அவர் கூறும் போது "எல்லா குழந்தைகளும் பிறக்கும் போது அழுது கொண்டேதான் பிறக்கும். ஆனால் என் தங்கை துளசியின் குழந்தை கெக்கபுக்கே கெக்கபுக்கே என சிரித்து கொண்டுதான் பிறக்க வேண்டும். அப்போது சிரிக்கும் குழந்தை வாழ்நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்.
இந்த வசனம்தான் அபத்தாமாக இருக்கிறது. பொதுவாக குழந்தை பிறந்தவுடன் அழ வேண்டும். இல்லாவிட்டால் சில நிமிடங்களில் அழ வேண்டும். அப்படியில்லாவிட்டால் மருத்துவர்கள் அதை அழ வைக்க ஏதாவது முயற்சிகளை எடுப்பர். குழந்தை பிறந்தவுடன் அழுதால்தான் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இப்படி மருத்துவ உண்மைக்கு புறம்பாக நியாயமே இல்லாமல் சீரியல்களில் வசனங்கள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
என்னதான் அண்ணன் தங்கை பாசம் இருந்தாலும் மருத்துவ உண்மையை எப்படி மாற்ற முடியும். என்னதான் சின்ராசுவுக்கு குழந்தை பிறப்பு குறித்து தெரியாவிட்டாலும் ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு குழந்தை அழுது பிறந்தால்தான் ஆரோக்கியமான குழந்தை என்ற விஷயம் தெரியாமல் போனது ஏனோ? குழந்தை பிறந்ததும் ஆணா, பெண்ணா என கேட்ட பிறகு உறவினர்கள் கேட்பது குழந்தை அழுததா டாக்டர் என்பதுதான்!












Click it and Unblock the Notifications