ஆஹா கல்யாணம்: ஐஸ்வர்யா பற்றி மகாவிற்கு தெரிய வந்த உண்மை.. அடுத்த பிரச்சனையில் சூர்யா குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியலில் செப்டம்பர் 27ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லாமலே தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமாற்றுவது மகாவிற்கு தெரிய வந்திருக்கிறது.

ஏற்கனவே உண்மையை மறைத்து மகா சூர்யாவை திருமணம் செய்ததால் தான் பெரும் பிரச்சனை வந்திருக்கும் நிலையில் இந்த உண்மையை மகா சூர்யாவிடம் சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. ஆனாலும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. கடந்த வார டிஆர்பி வரிசையில் கூட விஜய் டிவியில் இந்த சீரியல் முதல் 5 இடங்களுக்குள் வந்திருந்தது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரத்தில் ஆஹா கல்யாணம் சீரியலில் அக்காவுக்கு ( ஐஸ்வர்யா) பார்த்த மாப்பிள்ளை( சூர்யா) கடைசி நேரத்தில் கௌதம் சூழ்ச்சியால் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறி இருந்ததால் மகா( தங்கை) சூர்யாவை கல்யாணம் செய்ய வேண்டிய நிலைமை வந்தது. திருமணத்தில் பல ஏமாற்றங்கள் இருந்ததால் சூர்யா மகாவை வெறுத்து ஒதுக்கி வருகிறார். இப்படியாக சீரியல் இருக்கும் நிலையில் இந்த வாரத்திற்கான அடுத்த பிரச்சனையும் வெடித்திருக்கிறது.
ஏற்கனவே ஐஸ்வர்யா மற்றும் கௌதம் பிரச்சனை வீட்டிற்கு தெரிய வந்து பெரும் பஞ்சாயத்து ஏற்பட்டு இருக்கிறது. அதிலிருந்து பல போராட்டத்திற்கு பிறகு தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக குடும்பத்தினர் முடிவு செய்து இருக்கின்றனர். அதுவும் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக மொத்த குடும்பத்தை ஏமாற்றி இருப்பதால் அதை நம்பி தான் சூர்யா வற்புறுத்தலால் கௌதம் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று வெளியான பிரமோவில் ஐஸ்வர்யா போனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அதை எடுத்து மகா பேச, அப்போது நீ கர்ப்பம் என்று பொய் சொல்ல சொன்னதால்தான் நான் கர்ப்பம் என்று சொன்னேன் என்று எதிர் முனையில் ஒரு நபர் பேச, அதை கேட்டு மகா அதிர்ச்சி அடைகிறார். அதோடு அக்கா கர்ப்பமாக இல்லை என்று தெரிந்தால் சூரியா வாழ்க்கை முழுக்க என்கூட பேச மாட்டார். நான் என்ன பண்ணுவேன் என்று யோசிக்கிறார்.
உடனே இந்த உண்மையை பற்றி சொல்ல போனை கையில் எடுத்துக் கொண்டு மண்டபத்தை நோக்கி ஓடுகிறார். அங்கு அவருடைய அம்மாவிடம் இது பற்றி சொல்ல முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் கௌதம் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்ட போவது போன்று ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

மகா இந்த உண்மையை சூர்யாவிடம் சொல்வாரா? அல்லது மகாவின் அம்மா கோடீஸ்வரியிடம் சொல்வாரா? அப்படி ஒருவேளை கோடீஸ்வரி தனக்கு தெரிய வரும்போது இந்த விஷயத்தை இப்போ சொல்ல வேண்டாம் என்று வழக்கம்போல மறைத்தால் அடுத்த சூர்யா மகா வாழ்க்கையில் புது பிரச்சனை வரும். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications