ஆஹா கல்யாணம் சீரியலில் அடுத்து நடக்க போவது இதுதானா? செம ட்விஸ்ட்டா இருக்கே! கௌதம்க்கு ஆப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற தகவல்கள் கிடைத்திருக்கிறது. இதில் பிரபாவின் காதலை சித்ரா தெரிந்து கொள்கிறார். அதுபோல ஐஸ்வர்யாவை பழி வாங்குவதற்காக கௌதம் புது பிளான் போட்டு இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் மகாவிடம் ராஜலட்சுமி ஒரு நகையை கொடுத்து அதை பத்திரமாக வைக்க சொல்ல அந்த நகையை திருடி வைத்த கௌதம் அம்மா சித்ராதேவி, கோடீஸ்வரி மீது திருட்டு பழியை போடலாம் என்று பிளான் போட்டு இருந்த நிலையில் அதை ஐஸ்வர்யா வீடியோ எடுத்து வைத்து சித்ரா தேவியை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

Television Vijay TV

பிறகு வேறு வழி இல்லாமல் சித்ராதேவி தான் திருடி வைத்த நகையை மகாவிடம் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் சித்ராதேவி தான் நகையை திருடினார் என்பது பற்றி மகா மற்றும் ஐஸ்வர்யா பேசிக் கொண்டிருப்பதை கோடீஸ்வரி கேட்டு விடுகிறார்.

ஏற்கனவே வீட்டில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சூர்யா தன்னுடைய தாத்தா ஆசைப்பட்ட மாதிரி விஜய் மற்றும் அனாமிகா கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார். விஜய்யின் கல்யாணம் முடிந்த பிறகு தான் தான் ஆபரேஷன் செய்வேன் என்று தாத்தா சொல்லி இருப்பதால் அதற்காக சூரியா திருமண ஏற்பாடுகளை பார்க்கத் தொடங்கி இருக்கிறார்.

அதே நேரத்தில் விஜயின் திருமணத்தில் மதனை வரவழைத்து ஐஸ்வர்யாவை அவமானப்படுத்துவதற்காக கௌதம் பிளான் போட்டிருக்கிறார். கௌதம் மற்றும் சித்ரா தேவியே ஐஸ்வர்யா வீடியோ எடுத்து மிரட்டி கொண்டிருப்பதால் ஐஸ்வர்யா மற்றும் மகாவை பழிவாங்குவதற்காக கௌதம் புது பிளான் போட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் விஜய் மற்றும் பிரபா காதலித்துக் கொண்டிருக்கும் விஷயம் சித்ரா தேவிக்கு தெரிய வருகிறது. சித்ராதேவி பிரபாவை வைத்து விஜய் மற்றும் அனாமிகா திருமணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+