எத்தனை பேர் வந்தாலும்.. தன்மானத்தோடு எதிர்த்து நில்.. ஆரி முழக்கம்
சென்னை: எத்தனை பேர் சேர்ந்து உன்னால் முடியாது என்று தலையில் தட்டி உட்கார வைத்தாலும் தன்மானத்தோடு எதிர்த்து நிற்க வேண்டும் முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளவே கூடாது என்று பிக்பாஸ் ஆரி அவருடைய ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
பிக்பாஸில் மட்டுமல்ல மக்களின் மனதையும் ஜெயித்த ஆரி பேசிய வீடியோவை பார்த்த அவருடைய ரசிகர்கள் கமெண்ட் மழைகளை பொழிந்து வருகிறார்கள்.
விவசாயத்தின் காவலனாகவும் தற்போது இளைஞர்களின் இளம் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆரிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி ஆரி என்றால் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு பிரபலமாகிவிட்டார்.

சமூக ஆர்வலர்
பிக்பாஸ்க்கு முன்பாக சில திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் யாருக்குமே தெரியாமல் தான் இருந்து கொண்டிருந்தார் .தற்போது பிக்பாஸில் அவரது முழு திறமையும் வெளிப்படுத்தி அவர் யார் என்பதை இந்த உலகிற்கு நிரூபித்திருக்கிறார் .அவர் ஒரு சமூக ஆர்வலர் மட்டுமல்லாமல் இயற்கையை பாதுகாக்க துடித்துக்கொண்டிருக்கும் ஒரு இளம் புரட்சியாளர்.

ரசிகர்கள் வெயிட்டிங்
இவருடைய பேச்சை கேட்பதற்காகவே இன்ஸ்டாகிராமில் ஒரு கூட்டம் தவமாய் தவமிருந்து அவர் லைவில் வந்து எப்போது பேசுவார் என்று காத்திருந்தது. இந்த வீட்டிற்குள் தான் அவருடன் இருந்தவர்கள் இவர் அடிக்கடி அட்வைஸ் பண்ணி கழுத்த அறுக்கிறார் என்று ஒவ்வொரு வாரமும் இவரை நாமினேஷன் செய்துவந்தனர் .ஆனால் வெளியில் இவர் பேசுவதை கேட்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள்.

சிரித்த முகம்
ஆனாலும் மிகவும் எளிமையாக ரசிகர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் சிரித்த முகமாகவே பதிலளித்து ரசிகர்களின் தன்னம்பிக்கையும் கூட்டி வருகிறார். இன்ஸ்டாகிராமில் லைவில் வந்து இவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இவரிடம் பல்வேறு ரசிகர்களும் எப்போது லைவ்வில் வருவீர்கள் என்று தான் ஆர்வமுடன் கேட்டு வந்தனர். அவர்களின் ஆசையை தற்போது நிரூபித்திருக்கிறார்.

மறக்க முடியாத கமெண்ட்
ஆனாலும் ஒவ்வொரு ரசிகர்களின் கமெண்ட்களுக்கும் பதில் அளித்து கொண்டிருக்கிறார் .அதில் பலர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் உங்களால் மறக்க முடியாத ஒரு முமண்ட் என்றால் என்ன என்று சொல்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நான் என் மனைவிக்கு முதல் முறையாக கடிதம் எழுதியது என்று கூறியிருக்கிறார். எப்போதும் எப்படி சிரித்த முகமாகவும் பலபேர் எதிர்த்து உங்க எதிரே நிற்கும் போது நீங்கள் தனி ஆளாக துணிந்து நிற்கிறீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

இதனால்தான் பிக் பாஸ்
அதற்கு அது பல வருடங்களாகவே நான் கஷ்டப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் அடிபட்டு ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டது .இந்த வீட்டிற்குள் இருந்த அனைவரும் எனது கேரக்டரை உங்கள் முன்பு காட்டியிருக்கிறார்கள். அதனால் நான் அவர்களுக்கு எப்போதுமே நன்றி கூறுவேன் என்று சிரித்த முகமாகவே கூறியிருக்கிறார். உண்மைதான்.. இந்த குணம்தான் இவரை பிக் பாஸாக்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications