அதெல்லாம் தப்புங்க.. அப்படியா பண்ணுவீங்க.. பொங்கி எழுந்த ஆரி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுவிட்டு ஆரி வெளியிட்ட வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தன்னுடைய ரசிகராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி போட்டியாளர்களை அவதூறாக விமர்சனம் செய்வது கேவலமான செயல் என்று ஆதங்கத்துடன் வெளியிட்டிருக்கிறார்.
தற்போது இவர் பேசிய வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசுகையில், ஏன் இப்படி செய்கிறார்கள் என்று அவர் அதிருப்தியடைந்துள்ளாராம்.

ஆரி வின்னர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஆரி வின்னர் ஆனது மட்டுமல்லாமல் ரசிகர்களின் ரியல் ஹீரோவாகவும் மாறிவிட்டார் .இதற்கு முன்பு இவர் யாரென்று தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பட்டிதொட்டியெல்லாம் இவரது பெயர் தான் பெரும் வைரலாக பரவி வந்தது.

பிக் பாஸ் பிரபலம்
இவரது பெயரைக் கூறி இவரை பற்றி பேசாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் அதில் இவருடைய கேரக்டர் பற்றியும் தான் பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று வெற்றி கொண்டாட்டத்தை கூட கொண்டாடவில்லை அதற்காக எந்த ஒரு வீடியோக்களும் வெளியிடவில்லை என்று பல்வேறு ரசிகர்கள் காத்திருந்தனர் .

அதிர்ச்சியில் ஆரி
தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இவரை வெற்றி பெறுவதற்காக உலகில் எங்கெங்கெல்லாமோ இருந்து தமிழ் ரசிகர்கள் இவருக்காக ஓட்டளித்து வெற்றியடைய வைத்தார்கள். வெற்றிபெற்ற பிறகு இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எந்த வீடியோவும் வெளியிடாமல் இருந்திருக்கிறார் .

இதெல்லாம் தப்பில்லையா
தற்போது உடல்நிலை கொஞ்சம் சரியானதும் தனது ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் என்னை வெற்றி பெற வைத்ததற்கு அனைவருக்கும் நன்றி அதுமட்டுமில்லாமல் என்னால் இவ்வளவு நாள்கள் உங்களிடம் பேச முடியவில்லை அதற்கு என்னுடைய உடல்நிலை தான் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.

அப்படியா திட்டுவது
அதுமட்டுமல்லாமல் என்னுடைய பெயரை சொல்லி சக போட்டியாளர்களை அசிங்கமான வார்த்தைகளாலும் திட்டி தீர்த்து இருக்கிறார்கள் இது கேவலமான செயல் என்று கோபமாக பேசி இருக்கிறார். அடுத்தவர்களை கேவலமாக பேசும் போது நமது முகம் தெரியாது என்பதற்காக என்ன வேணாலும் பேசலாம் என்று அர்த்தமில்லை .நமது பேச்சிலேயே ஒருவருடைய முகம் தெரிந்து விடும்.

கெட்ட வார்த்தை கூடாது
அது நல்ல வார்த்தைகளை பேசும் போது நல்லபடியா கெட்ட வார்த்தைகளை பேசும் போது கெட்ட தனமாக தான் தெரியும் .அதற்காக அடுத்தவர்களை குறை சொல்லி பேசுவதால் நாம் நியாயவாதியாகவும் நல்லவர்களாகவும் மாறிவிட முடியாது. இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை சிலர் யூஸ் பண்ணி பேசி இருக்கிறார்கள் .அதை பார்க்கும் போது மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது .

இந்த மாதிரி பேசக் கூடாது
என்னதான் இருந்தாலும் அவர்கள் என்னுடைய சக போட்டியாளர்கள். அவர்களை இந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது. அவர்களால் தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அவர்கள்தான் எனது குணத்தையும் கேரக்டரையும் வெளியே கொண்டுவர முடிந்தது. அதனால் தான் உங்களுக்கும் பிடித்திருக்கிறது .அதனால் இந்த மாதிரி யாரையும் மனது புண்படும்படி பேசக் கூடாது என்று அவருடைய ரசிகர்களுக்கும் தெரிவித்திருக்கிறார்.

மனதளவில் பாதிக்கப்படுவார்கள்
அதுமட்டுமில்லாமல் எனது சக போட்டியாளர்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் இந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் ஒருவரைப் பற்றி பேசக்கூடாது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கும் உறவினர்களுக்கும், குழந்தைகள் எல்லாம் இருக்கும் .இந்த மாதிரி நீங்கள் பேசும்போது அவர்கள் அதனை நினைத்து மனதளவில் பெரிதும் பாதிக்கப் படுவார்கள் .அதனால் தயவு செய்து இந்த மாதிரி பேசக்கூடாது .

எதை வேண்டுமானாலும் பேசலாமா
முகம் தெரியாது என்பதற்காக என்ன வேணாலும் பேசலாம் என்று இல்லை. உங்கள் ஐடியை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமான செயல் ஒன்றும் இல்லை அதற்கு முன்பாகவே உங்களது பேச்சிலேயே உங்களது முகம் தெளிவாக தெரிந்துவிடும். அடுத்தவர்களை குறை சொல்வதற்கு முன்பு நாம் அதற்கு தகுதியாக தான் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும் என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

உண்மையில் வருத்தப்படுகிறேன்
இவரை எதிர்த்த சக போட்டியாளர்களை சமூக வலைத்தளங்களில் இவருடைய ஐடியில் இருந்து சிலர் அசிங்கமாக திட்டி தீர்த்து இருக்கிறார்கள் அதற்காக தான் வருத்தத்துடன் வீடியோவே வெளியிட்டிருக்கிறார். உண்மையில் போட்டியின்போதும் சரி, போட்டிக்குப் பின்னர் வெற்றி பெற்ற பிறகும் கூட சரி, தனது சக போட்டியாளர்களை கெளரவமாகவே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications