சும்மா வீட்டை விட்டு போகல! பிரச்சனை என்றால் பெற்றோரை பார்க்காமல், ஏன் அந்த வீட்டுக்கு? ஆர்த்தி ரவி கேள்வி
சென்னை: நடிகர் ரவி மோகன் அவருடைய மனைவியை பிரிவதாக கடந்த வருடத்தில் அறிவித்திருந்தார். அதற்கு பிறகு சில வாரங்களுக்கு முன்பு ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து ரவி மோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தன் மீது ரவி மோகன் வைத்த குற்றச்சாட்டுகள் தவறு என்று ஆர்த்தி ரவி ஒரு பதிவு என்று வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை தான் சமூக வலைத்தளத்தில் தீர்க்க முடியாத பிரச்சனையாக நீண்டு கொண்டே இருக்கிறது. கடந்த வருடத்தில் ரவி மோகன் தன்னுடைய விவாகரத்து செய்தியை அறிவித்தபோது பெரிய அளவில் பேசப்பட்டது. இதுவரைக்கும் எந்த கிசுகிசுப்பில் மாட்டாமல் இருந்த இவருக்கா இந்த நிலைமை என்று பலர் கருத்து கூறி வந்தனர். ஆனால் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தான் விவாகரத்து வழங்க மாட்டேன் தான் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ரவி மோகன் புகைப்படங்கள்
அதற்குப் பிறகு இந்த பிரச்சனை கொஞ்ச நாள் அமைதியாக இருந்த நிலையில் இப்போது மீண்டும் பூதாகரமாக வெடிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த வாரத்தில் ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷாவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதை பார்த்ததும் ஆர்த்தி ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் கொடுக்கிறேன் என்று ரவி மோகனும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ரவி மோகன் வைத்த குற்ற சாட்டுகளுக்கு ஆர்த்தி ரவி பதில் கொடுத்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
ரவி மோகன் அறிக்கை
ரவி மோகன் அறிக்கையில் வீட்டில் பிரச்சனை என்று நான் வீட்டை விட்டு வெளியேறிய போது கையில் 10 பைசா கிடையாது, காலில் செருப்பு கூட இல்லாமல் தான் நான் கெனிஷா வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர்தான் என்னுடைய ஒளி, அவர்தான் எனக்கு சப்போர்ட் செய்தார் என்று கூறியிருந்தார். இதற்கு ஆர்த்தி ரவி மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
ஆர்த்தி ரவி பதில்
ஆர்த்தி ரவி பதிவில் தனது, சொத்துக்களையும் கௌரவத்தையும் இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறி போகவில்லை. நன்றாக முன்கூட்டியே மிக தெளிவாக திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், அணிகலன்களை அணிந்து தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு 5 கோடி மதிப்புள்ள ரேன்ஜ் ரோவர் காரின் தான் வீட்டை விட்டு சென்றார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும் மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார்.
பெற்றோர் வீட்டிற்கு போகவில்லை
உண்மையில் அவர் என் பிடியிலிருந்து தப்பி செல்ல நினைத்திருந்தால் நேராக அவர் அடிக்கடி "தொலைத்த பெற்றோர்கள்" என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு எங்கள் வாழ்க்கையில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம். துன்புறுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டதாக புகார் கூறுகிறார், அப்படியானால் ஏன் இத்தனை ஆண்டுகள் வரை காத்திருந்தார்?
ஆர்த்தி ரவி கேள்வி
ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளை கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்து கொண்டார்? வாழக்கூடாத சூழ்நிலையில் எதற்காக இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்? அவருக்கு உரிமை உள்ள அனைத்தையும் நன்றாக அனுபவித்து விட்டு தனது குட்டு வெளிப்பட்டு தன் மீது குற்றம் சுமத்தப்படும் என்ற நிலையில் தான் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதன் காரணம் பயம் அல்ல அதற்கு மேல் அவருடைய ரகசிய வாழ்வை காப்பாற்ற முடியாமல் போனதே என்று ஆர்த்தி ரவி குறிப்பிட்டு இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications