குடும்பத்தோடு ரவி மோகன் போட்ட போட்டோ! இதுதான் புதிய தொடக்கம்! ஆர்த்தி ரவி வெளியிட்ட அடுத்த பதிவு
சென்னை: நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ரவி மோகன் மற்றும் அவரது காதல் மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் ஒரு கலக்கலான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதே நேரத்தில் ரவி மோகன் தன்னுடைய சகோதரனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்த்தி ரவியின் பதிவு
ஆர்த்தி கருப்பு நிற உடையில் அழகாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "இது வெறும் ஆரம்பம் தான்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் 'ஃபயர்' எமோஜியை தட்டிவிட்டுள்ளனர். "வெல்கம் பேக் குயின்" என ரசிகர்கள் ஆர்த்தியை வரவேற்றுள்ளனர். தனுஷின் அக்கா டாக்டர் கார்த்திகா "அழகி" என்று சொல்லி 'ஃபயர்' எமோஜி விட்டு இருக்கிறார். ஆர்த்தி போஸ்ட் போட்ட சில மணிநேரத்திலேயே அதற்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ் வந்துவிட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரவி மோகன் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். ஆனால் ஆர்த்தியோ நான் ஜெயம் ரவியின் மனைவி என்று இன்ஸ்டாகிராம் பயோவில் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து வழக்கு விசாரணையின்போது ஆர்த்தி மாதம் ₹40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டார். அதை பார்த்த சிலர் ரவியை விட்டு பிரிய மனசு இல்லாததால் தான் இவ்வளவு பெரிய தொகையை கேட்டிருக்கிறார் என்றும் சிலர் வெளிநாட்டில் படித்திருக்கிறீர்கள் அல்லவா போய் வேலை பார்த்து சம்பாதிக்கவும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
பிள்ளைகள்
ஆர்த்தி தனது இளைய மகன் அயானின் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தி பெரிய போஸ்ட் போட்டிருந்தார். அதில் அயானின் ஷூ அளவு தன் ஷூ சைஸாகிவிட்டது எனவும் இப்படியொரு கஸ்டடி பேட்டில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் காமெடியாக தெரிவித்திருந்தார். மூத்த மகன் ஆரவ் அம்மாவை விட உயரமாக வளர்ந்துவிட்டார். ரவி மோகனும் தன் மகன்களை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்திற்கு பிறகு ஆர்த்தியின் இந்த போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல ஆர்த்தி போஸ்ட் போட்ட நேரத்தில் ரவிமோகன் தன்னுடைய அண்ணனான மோகன் ராஜா உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் மனைவியை விட்டு தான் பிரிந்தாலும் தன்னுடைய குடும்பத்தை விட்டு தான் பிரியவில்லை என்று ரவி மோகன் சொல்லாமல் சொல்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications