கெனிஷா இன்னும் எத்தனை நாளைக்கு? ரவி மோகன் செய்ததை ஆர்த்தி செய்திருந்தால்?ஒரு கை நீள்கிறது: பிரபலம்
சென்னை: பிரபல தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கணேசனின் மகள் ப்ரீத்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கெனிஷாவோடு ஜோடியாக வந்திருந்தார் ரவி மோகன்.. ஏற்கனவே திருமணத்துக்கு கெனிஷாவுடன் வந்த அதிர்ச்சியே அடங்காத நிலையில், மறுபடியும் இருவரும் ஜோடியாக வருகை தந்தனர்.. அத்துடன் தங்களது உறவை உறுதி செய்துள்ளதாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "2 பேர் சேர்ந்து திருமணத்துக்கு போகக் கூடாதா என்ன? விஜய் மட்டும்தான் திரிஷாவுடன் போகணுமா? ஆனால், ஒழுக்க கலாச்சாரம் என்று இங்கு உள்ளது.. அதனால்தான் இது போன்ற நிகழ்வுகள் அதற்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.

தவறான முன்னுதாரணங்கள்
விவாகரத்துக்கு கோரிய நபர், இன்னொரு பெண்ணுடன் சாதாரணமாக பயணித்தாலே, தப்பிதம் கற்பிக்கும் இந்த உலகில், ஒரே மாதிரியான உடையணிந்து, ஜோடியாக, கை கோர்த்து வரும்போது, ஒழுக்கக்கேடாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. இன்னமும் தங்களை நட்பு என்றே இவர்கள் சொல்லி கொண்டாலும், மக்களின் பார்வைக்கு ஒழுக்கக்கேடாகவே தெரியும்.. சமூகத்துக்கு ஏற்ற செயலாக இதை பார்க்க முடியாது.
இவர்கள் எல்லாம் மிகப்பெரிய நடிகர்கள்.. சினிமாவில் கருத்து சொல்லக்கூடியவர்கள்.. மக்களுக்கும் அறிவுரை சொல்லக்கூடியவர்கள்.. இவர்களை பின்தொடரக்கூடிய லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் இருக்கும்போது, முன்னுதாரணமாக இதையெல்லாம் எடுத்து கொள்ளவும் கூடாது.
உன்னதமான உறவுகள்
இதே சினிமாவில் உன்னதமான உறவுகளுடன் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நடிகர், நடிகைகள் மட்டுமல்ல துணை நடிகர்கள், துணை நடிகைகள் என எத்தனையோ பேர் தங்களது குடும்பத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. தியாக மனப்பான்மையுடனும் இருக்கிறார்கள்..
அதேசமயம், குடும்பத்தில் சிக்கல்கள் தம்பதிக்குள் வரத்தான் செய்யும். ஆனால், அங்கே 3வது நபர் உள்ளே நுழைந்தாலோ, ஆலோசனை, அறிவுரை தந்தாலோ, அதுவே எதிரானதாக திரும்பிவிடுகிறது.. ஜெயம் ரவி விவகாரத்திலும், தம்பதிக்குள் முரண் இருந்துள்ளது. 3வது நபரால்தான் பிரச்சனை பெரிதாகி உள்ளது.
சமூகத்தின் பார்வை வேறு
மனைவி, குழந்தைகள் என குடும்பத்தோடு சேர்ந்து தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாடும்போது, இந்த சமூகத்தின் பார்வையே உங்கள் மீது வேறு விதமாக இருக்கும். ஆனால், மனைவி, குழந்தைகளை கண்ணீரில் விட்டுவிட்டு, இன்னொரு பெண்ணுடன் இப்படி பயணப்படுவது உண்மையிலேயே மகிழ்ச்சியை தருகிறதா? என்பதை அவர்களது மனசாட்சிக்கே விட்டுவிடலாம்.
ஜெயம் ரவி என்பவர் நடிகர் மட்டுமே அல்ல, நல்ல மனிதரும் கூட என்பதுதான் மக்களிடம் இத்தனை காலம் படிந்துவரும் உண்மை.. இந்த பார்வையுடன் அவரது செய்கைகளையும் அணுக வேண்டும். மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்த வாழ்க்கையே நிரந்தரமில்லாமல் தூக்கி வீசிவிட்டு கோவா சென்றபோது, தற்போதுள்ள வாழ்க்கை மட்டும் எந்த அளவுக்கு நிரந்தரமாக இருக்கும்? கெனிஷாவுடன் இன்னும் எத்தனை வருடம் இவரால் பயணப்பட முடியும்?
இதையே ஆர்த்தி செய்தால்
உங்களது வாழ்க்கையை வாழ உங்களுக்குஉரிமை உள்ளது. ஆனால், உங்களது வாழ்க்கை இன்னொருவரின் கண்ணீருக்கு காரணமாகிவிடக்கூடாது- ஜெயம் ரவி இன்றைக்கு ஜோடி சேர்ந்து போகும் இதே காரியத்தை ஆர்த்தி செய்திருந்தால்? அப்போது சமுதாயம் ஆர்த்திக்கு என்ன பட்டம் தந்திருக்கும்?
எனவே, இங்கு ஆணாதிக்கம் இன்னமும் அப்படியேத்தான் உள்ளது. ஆணாதிக்க பார்வை அதிகமாக இருக்கும்போது, விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளபோது, எப்படி பொதுவெளியில் இவ்வளவு தைரியம் வருகிறது?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சுஜாதா விஜயகுமார் பதிவு அர்த்தம் என்ன?
இதனிடையே, வேறொரு சேனலுக்கு பேட்டி மூத்த பத்திரிகையாளர் தந்திருந்த பயில்வான் ரங்கநாதன், "ஆர்த்தியின் அம்மா தன்னுடைய இன்ஸ்டா பதிவில், "உண்மை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம், எப்போதுமே உண்மையே வெல்லும்.. கடவுள் கருணை நிறைந்தவர். நமக்கு கடவுள் உதவி புரிவார்.. கடவுளின் வழிகளை ஒருபோதும் சந்தேகிக்காதே.. அது மிக சிறந்தது. இருள் சூழ்ந்திருக்கும்போது, ஒரு கை நீள்கிறது,. அதை இறுகப் பற்றிக்கொள்" என்று பதிவிட்டுள்ளார்.
"ஒரு கை நீள்கிறது" என்றால், மற்றொரு நபரை உனக்கு திருமணம் செய்ய தயாராக பார்த்து வைத்திருக்கிறேன், திருமணம் செய்து கொள் என்பதைதான் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் சுஜாதா என்று விளக்கம் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications