அசையாமல் நின்ற ஆர்த்தி.. திருதிருன்னு விழிக்கும் கெனிஷா.. ரவி மோகன் ஜீவனாம்சம் தரலேன்னா? பிரபலம் நச்
சென்னை: மாதம் 40 லட்சம், ஆர்த்திக்கு தரவேண்டிய நிலைமை ஜெயம் ரவிக்கு வந்துள்ளதால், பொன் முட்டை இடும் வாத்திடம் கெனிஷாதான் ஏமாந்து போவார்.. விவாகரத்து தராமல் வழக்கை இழுத்தடிக்கும்போது, அது கெனிஷா & கோ-விற்கு பின்னடைவுதான். நீதிமன்றத்தில் அடுத்தடுத்த வாய்தாக்கள் வரும்போது, இது ஜெயம் ரவிக்கான அவகாசமாக இருக்கும்.. அவர் தன்னை மறுஆய்வு செய்து கொள்வதற்கான நேரமாகவும், வாய்ப்பாகவும் அமையும்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, இது ஜீவனாம்சம் என்று கருதமுடியாது.. வழக்கு முடியும்வரை இதை பராமரிப்பு செலவு என்றே சொல்ல வேண்டும். இடைக்காலமாக தரப்படும் செலவாகவே கருதப்படுமே தவிர, வழக்கு நடத்தும் செலவாக கருத முடியாது.

அறிக்கை நாடகம்
18 ஆண்டு காலம் வாழ்ந்த வாழ்க்கையை நினைக்காமல், "அறிக்கை நாடகம் நடத்துகிறார் ஆர்த்தி" என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? 2 பேரின் வாழ்க்கையில் 3வது நபர் வந்துவிட்டார்.. தம்பதிக்குள் கெனிஷா 3வது நபராக வந்து உட்கார்ந்துவிட்டார்.. அதனால்தான் இப்படி அறிக்கை போர் நடக்கிறது.
ஜெயம் ரவியின் 4 பக்க அறிக்கையை பார்த்தால், சொந்தமாக எழுதியது போல தெரியவில்லை. வழக்கறிஞரை வைத்து எழுதியது போலவும் தெரியவில்லை.. "எக்ஸ் மனைவி" என்ற வார்த்தையை வழக்கறிஞர்கள் யாருமே பயன்படுத்த மாட்டார்கள்.. வழக்கு முடிந்தால்தான் எக்ஸ் என்று சொல்ல முடியும்.. விவாகரத்து கிடைக்கும் முன்பே எக்ஸ் என்று சொல்வதே, நீதிமன்ற அவமதிப்புதான்..
40 லட்சம் ஜீவனாம்சம்
ஜெயம் ரவி மீது இன்னமும் சாஃப்ட் கார்னர் எல்லாருக்குமே இருக்கவே செய்கிறது. ஆனால் ஏதோ ஒரு சூழலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். 40 லட்சம் நீதிமன்றத்தில் ஆர்த்தி இன்று கேட்டிருப்பதாலேயே, விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டுவிட்டார் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. விவாகரத்துக்கு ஆர்த்தி ஒப்புக் கொள்ளவில்லை.
பிள்ளைகளின் வளர்ப்புக்கும், தங்களுடைய வாழ்வாதாரத்துக்கும், பராமரிப்புக்காக கேட்கப்படும் செலவுதான் இது.. விவாகரத்து நடந்தால் ஜீவனாம்சம் என்று தனியாக கேட்கப்படும். ஆர்த்தி கேட்பது உரிமைத்தொகை.. இதன்மூலம் தன்னுடைய உரிமையை நிலைநாட்டப் பார்க்கிறார்.
வாய்தா இழுபறிகள்
ஒருவேளை, ஆர்த்தி கேட்டுள்ள மாதம் 40 லட்சம் தரவில்லையானால், தன்னால் ஏன் தர முடியாது என்ற விளக்கத்தை நீதிமன்றத்தில் ஜெயம் ரவி சொல்ல வேண்டியிருக்கும்.. அந்த காரணம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கு நாட்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்..
எப்போதுமே சிவில் வழக்கு சேர்ந்துவிட்டால், உடனே வழக்கு முடிவுக்கு வராது. கெனிஷாவுடன் பொதுவெளியில் வந்தால், அதை பார்த்து கடுப்பாகி ஆர்த்தி டைவர்ஸ் தந்துவிடுவார் என்று ஜெயம் ரவி நினைத்தார். ஆனால், விவாகரத்து தரக்கூடாது என்பதில் இப்போதுதான் ஆர்த்தி உறுதியாக உள்ளார்.. அதேசமயம், தன்னுடைய அறிக்கையில் ஜெயம் ரவியை காயப்படுத்தாமலும் இருக்கிறார். இதனால் கெனிஷாவே தலையை சொறிந்து கொள்ளும் நிலைமையில் உள்ளார்..
கெனிஷா & கோ பின்னடைவு
மாதம் 40 லட்சம், ஆர்த்திக்கு தரவேண்டிய நிலைமை ஜெயம் ரவிக்கு வந்துள்ளதால், பொன் முட்டை இடும் வாத்திடம் கெனிஷாதான் ஏமாந்து போவார்.. விவாகரத்து தராமல் வழக்கை இழுத்தடிக்கும்போது, அது கெனிஷா & கோ-விற்கு பின்னடைவுதான். நீதிமன்றத்தில் அடுத்தடுத்த வாய்தாக்கள் வரும்போது, இது ஜெயம் ரவிக்கான அவகாசமாக இருக்கும்.. அவர் தன்னை மறுஆய்வு செய்து கொள்வதற்கான நேரமாகவும், வாய்ப்பாகவும் அமையும். எனக்கு தெரிந்து இந்த விவகாரம் விவாகரத்து வரை போகாது..
கெனிஷா ஏமாந்து போவார்
கெனிஷாதான் இதை உணரணும்.. அடுத்த பெண்ணின் கண்ணீரை எப்படி நாய்ஸ் (சத்தம்) என்று சொல்லலாம்? எவ்வளவு ஆணவமான பேச்சு இது? தவறான கணக்கு போட்டுள்ளார் கெனிஷா..பணக்கார குடும்ப "பொன் முட்டை வாத்து", அங்கிருந்து சிகிச்சைக்காக தன்னிடம் சிக்கிவிட்டதால், வாத்து வைத்து பொன் முட்டைகளை அள்ளிக் கொள்ளலாம்..
ஒருகட்டத்தில் வாத்தையே வைத்து பெரிய அளவில் பேரம் பேசலாம் என்ற கணக்கு போட்டு இருக்கலாம். ஆனால், ஆர்த்தி தரப்பில் விவாகரத்து தரவே முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதால், இதிலும் ஏமாற்றம் கெனிஷாவுக்குதான்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications