எந்த மனைவிக்கும் இப்படிப்பட்ட அவமானம் வரக்கூடாது.. ரவி மோகன் மனைவி ஆர்த்தி உருக்கம்.. விஜயுடன் ஒப்பீடு?
சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ரவி மோகன் கோவாவில் சேர்ந்து சொத்து வாங்கியதாகவும், அதில் "திருமணம் ஆகவில்லை" என்று குறிப்பிட்டதாகவும் கூறப்படும் விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஆர்த்தி ரவி வெளியிட்ட நீளமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி, புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

ஆர்த்தி ரவி பதிவு
ஆர்த்தி ரவி தனது பதிவில் மிகவும் அமைதியாக இருந்தாலும், பல கேள்விகளை எழுப்பும் விதத்தில் கருத்துகளை பகிர்ந்துள்ளார். "ஒரு மனைவியின் மரியாதை பற்றி திடீரென எல்லாரும் பேச ஆரம்பித்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. பொதுமக்கள் முன் ஒருவரின் வாழ்க்கை சிதறும் போது அது ஏற்படுத்தும் உணர்ச்சி வலியை யாரும் கவனிக்கவில்லை. இந்த விவாதம் தவறு இல்லை, ஆனால் இதே மாதிரியான ஒரு சம்பவம் கடந்த வருடம் நடந்தபோது ஏன் இவ்வளவு சத்தம் எழவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
ஆர்த்தி ரவி உருக்கம்
அவர் மேலும் கூறுவதாவது, "அந்த நேரத்தில் பலர் தங்கள் கருத்துக்களை அமைதியாக வைத்துக்கொண்டார்கள். கதைகள் உருவாக்கப்பட்டன, ஊகங்கள் பரவின. பலரும் உண்மையை ஆராயாமல் ஒரு பக்கம் மட்டும் நம்பி எதிர்மறை கருத்துகளை பரப்பினார்கள். இதனால் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. ஒரு மனைவிக்கான அனுதாபம், அந்த கணவரின் 'மார்க்கெட் வால்யூ'யை பொறுத்ததா? அல்லது சரியான அரசியல் அல்லது சமூக சூழ்நிலை வந்தால் தான் அந்த பெண்களின் குரல் கேட்கப்படுமா?" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்றத்தாழ்வுகள்
மேலும், "சின்ன இடங்களில் இருக்கும் பெண்களின் குரல் என்ன ஆகிறது? அவர்களுக்கு பேச வாய்ப்பே கிடைக்காத நிலை இருக்கிறது. எந்த மனைவியும் இப்படியான அவமானத்தை அமைதியாக தாங்க வேண்டிய நிலை வரக்கூடாது. இன்று இந்த விவாதம் மாறி வருவது நல்ல விஷயம் தான். ஆனால் அனுதாபம் சக்திவாய்ந்தவர்களுக்கு மட்டும் இருக்கக்கூடாது. ஒரு மனைவியின் மரியாதை, அவளது கணவரின் நிலையைப் பொறுத்து இருக்கக் கூடாது" என்று அவர் பதிவை முடித்துள்ளார்.
இந்த பதிவு வெளியாகியதும் சமூக வலைதளங்களில் பல்வேறு எதிர்வினைகள் வெளியாகி வருகின்றன. ஒரு தரப்பு, "ஆர்த்தி ரவி மிகவும் நேர்மையான கேள்வியை எழுப்பியுள்ளார். இது பல பெண்களின் உண்மை நிலை" என்று ஆதரவு தெரிவிக்கிறது. மற்றொரு தரப்பு, "இது ரவி மோகனை குறிவைத்து மறைமுகமாக கூறிய பதிவு" என்று விமர்சிக்கிறது.
ரவி மோகன் பற்றிய சர்ச்சை
ரவி மோகன் தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு அவர் விவாகரத்து அறிவித்தது பெரும் பேசுபொருளாக மாறியது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது கோவா சொத்து விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மத்தியில் ஆர்த்தி ரவி வெளியிட்ட இந்த பதிவு, இந்த விவகாரத்தை தனிப்பட்ட பிரச்சனையிலிருந்து சமூக விவாதமாக மாற்றியிருக்கிறது.
விஜய் குடும்ப சர்ச்சைகள்
அதே நேரத்தில் ஆர்த்தி ரவி இவ்வளவு உருக்கமான பதிவு வெளியிட்டு இருப்பதற்கு பின்னாடி விஜய் மற்றும் சங்கீதாவை தொடர்பு படுத்தி தான் ஆர்த்தி இப்படி கேள்வி எழுப்புகிறாரா? என்ற கேள்விகளும் எழுகிறது. காரணம் விஜய் இப்போது நல்ல மார்க்கெட்டில் இருக்கும் நிலையில் அவருடைய மனைவி கொடுத்த விவாகரத்து வழக்கு காரணமாக பலர் விஜயை விமர்சித்து சங்கீதாவிற்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.
ஆனால் தான் ஒரு வருடத்திற்கு முன்பு ரவி மோகன் மீது புகார் தெரிவித்த போது தனக்கு யாரும் இவ்வளவு சப்போர்ட் பண்ணவில்லை என்று வருத்தத்தை ஆர்த்தி தெரிவித்திருக்கிறாரா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆர்த்தி ரவியின் இந்த பதிவு, பலரையும் சிந்திக்க வைக்கும் வகையில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications