வெறும் கையோட இல்லை.. 5 கோடி ரூபாய் காரில் ரவி மோகன் வீட்டை விட்டு வெளியே போனார்.. ஆர்த்தி ரவி பதிலடி
சென்னை: வெறும் காலோடு ரவி மோகன் வீட்டை விட்டு வெளியேறி போகவில்லை என்றும் அவர் மிகத் தெளிவாக ரூ 5 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில்தான் வீட்டை விட்டு சென்றார் என்றும் ஆர்த்தி ரவி அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்த்தி ரவிக்கும், ரவி மோகனுக்கும் இடையே விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நீதிமன்றத்தில் உள்ளது. ஆர்த்தி ரவி, தனது கணவர் ரவி மோகனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். தானும் அவரும் சேர்ந்து கட்டிய வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார் என ஆர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் கெனிஷா என்ற பாடகியுடன் ரவி மோகனுக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதை ரவி மோகன் மறுத்தார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் ஒரே நிற உடையில் கெனிஷாவும் ரவி மோகனும் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான் ஆர்த்தி ரவி, கெனிஷாவின் பெயரை சொல்லாமலேயே ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அறிக்கையாக ரவி மோகன் வெளியிடுகையில், கெனிஷா என் வாழ்க்கையில் ஒளி, வாழ்க்கையில் கிடைத்த நல்ல துணை. ஆரம்பத்தில் தோழியாக பழகிய அவர் தற்போது என் வாழ்வில் ஒளியாகிவிட்டார்.
அவர் நான் வெறுங்கால்களுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போது அவர் கெனிஷா எனக்காக துணை நின்றார். எனக்கு தேவையான உதவிகளை செய்தார். நான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போது கையில் பணம், பர்ஸ், வாகன ஆவணங்கள் என எதையும் கொண்டு வரவில்லை. என்னால் அவரது தொழிலுக்கு களங்கம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் சிலர் மேலும் அழிவு நிலைக்கு செல்வர் என்றும் தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் என் தாய், தந்தையரை காட்டிலும் ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும்தான் அனுபவித்தனர் என்றும் ரவி மோகன் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில்தான் ஆர்த்தி ரவி இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ரவி மோகனின் அறிக்கைக்கு பதில் சொல்லும் வகையில் பாயிண்ட் பாயிண்ட்டாக போட்டுள்ளார். அந்த அறிக்கையில் தனது சொத்துகளை கவுரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறி போகவில்லை. நன்றாக முன்கூட்டியே மிகத் தெளிவாக திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு 5 கோடி ரூபாய் மதிப்புள்ள Range Rover காரில்தான் வீட்டைவிட்டுச் சென்றார்.
அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும் மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டுதான் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி தொலைத்த பெற்றோர்கள் என குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தேன் என்ற அவரின் குற்றச்சாட்டும் பொய்யானது. எங்களுக்கு திருமணமான நாள் முதல் நாங்கள் என் மாமனார், மாமியாருடன் புகுந்த வீட்டிலும் மற்றும் எங்களுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டையிலும் கிழக்கு கடற்கரை சாலையிலும் உள்ள இரு வீடுகளில் மட்டுமே வசித்தோம். கொரோனா காலத்தில் நாங்கள் வீடு மாற்றம் செய்த ஓரிரு வாரங்களை தவிர நாங்கள் எப்போதும் என்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியதே இல்லை என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications