மாரி சீரியலில் இருந்து வெளியேறும் கதாநாயகி! காரணம் இதுவா? பேச்சுவார்த்தை எடுபடல!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆஷிகா படுகோன் அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு அவர் எதற்காக சீரியலில் இருந்து விலகுகிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
ஜீ தமிழில் ப்ரைம் டைமில் மாரி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த சீரியல் தெய்வீக சக்தி உள்ள ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் அமானுஷ்யங்கள் பற்றிய கதையாக இருந்தது. ஆனால் போக போக இந்த சீரியலில் நடக்கும் கதைகள் பார்க்கும் ரசிகர்களை மிரள வைத்தது.

தமிழில் கூட இப்படி எல்லாம் சீரியல் இருக்கிறதா? என்று வியந்து பார்க்கும் அளவிற்கு ட்ரோல்களில் கூட இந்த சீரியல் அடிக்கடி இடம் பிடித்தது. அதற்கு காரணம் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்த சீரியலிலும் சில காட்சிகள் இருந்தது.
அதாவது பாம்பு கார் ஓட்டி வில்லி மீது காரை இடித்து பழிவாங்கும்.. அதுபோல ஒரு குழந்தையை காப்பதற்காக பாம்பு பல சாகசங்களையும் செய்யும். ஏற்கனவே பல பாம்பு திரைப்படங்களில் இது போன்ற கதைகளை பார்த்த ரசிகர்களே வியந்து போகும் வகையில் இந்த சீரியலிலும் சில காட்சிகள் இருந்தது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீரியலில் அடுத்தடுத்து சில பிரபலங்கள் விலகி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் வனிதா விஜயகுமார் அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு அவருடையை காட்சிகள் பெரியதாக இல்லை. அதுபோல இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த சோனாவும் திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

அதற்கு பிறகும் சில மாற்றங்கள் நடந்தது. ஆனாலும் இப்ப வரைக்கும் ரசிகர்களிடம் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலின் கதாநாயகியே மாறப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அதிலும் மாரியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆஷிகா அடுத்த சில தினங்களில் இந்த சீரியலில் இருந்து விலகிடுவார் என்று கூறப்படுகிறது.
அதற்கான காரணம் சீரியல் தரப்பிலிருந்து எந்த பிரச்சனையும் இல்லையாம். அது போல சேனல் தரப்பில் இருந்தும் எந்த பிரச்சினையும் இல்லையாம். ஆனால் ஆஷிகாவிற்கு திரைப்பட வாய்ப்பு வந்திருப்பதாகவும் அதற்கு அவர் சீரியலில் இருந்து விலகுவதாகவும் கூறப்படுகிறது.
தயாரிப்பு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஹார்சிகா அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறாராம். அதனால் இந்த சீரியலில் கதாநாயகிக்காக ஆடிஷன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இனி புதிய மாரியாக யார் வரப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications