“அந்த” விளம்பரத்துல நடிச்சதால.. தற்கொலை வரைக்கும் போயிட்டேன்.. இதை மாத்திக்கணும்- நடிகர் அப்பாஸ்
சென்னை: 90s காலகட்டத்தில் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் அப்பாஸ்.
இவர் சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது பேட்டிகளில் தான் எதனால் சினிமாவை விட்டு விலகி இருந்தேன் என்று பல ரகசியங்களை கூறியிருக்கிறார்.
அத்தோடு நடிகர் அப்பாஸ் முதல் முறையாக விளம்பரங்களில் நடித்ததால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து எதற்காக தான் விளம்பரங்களில் நடித்தேன் என்ற உண்மையையும் கூறி இருக்கிறார்.

நடிகர் அப்பாஸ் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாக இருந்தாலும் அடுத்தடுத்து பல ஹிட்டான திரைப்படங்களில் நடித்திருந்தார். அதுவும் இவர் நடித்த திரைப்படங்களில் பாடல்களும் இப்போதும் பல ரசிகர்களால் முணுமுணுக்கப்படும் பாடல்களாக இருக்கிறது. தன்னுடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் மற்றும் ஸ்டைலான நடிப்பு மூலம் தனக்கென்று தனி அடையாளத்தை அப்பாஸ் வைத்திருந்தார்.
21 வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த அப்பாஸ் அந்த காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று விளம்பரங்களில் நடித்திருந்தார். குறிப்பாக பாத்ரூம் கிளீன் பண்ணும் ஹார்பிக் விளம்பரத்தில் இவர் நடித்திருந்தது இவருடைய ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருந்தது. என்ன அப்பாஸ் இப்படி இறங்கிவிட்டார். சாக்லேட் பாய் என்று பலராலும் கொண்டாடப்பட்ட நடிகர் அப்பாஸின் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம் பலரும் கூறி வந்தனர்.
அது குறித்து நடிகர் அப்பாஸ் இப்போது பேட்டியில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் எல்லாரும் அவங்க குடும்ப நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக தானே உழைக்கிறாங்க. நானும் அப்படித்தான். சினிமாவில் எனக்கு வாய்ப்பு அந்த நேரத்தில் ஒன்று இரண்டு கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் விளம்பரத்தில் நடித்தால் நல்ல வருமானம் தருவதாக சொன்னார்கள். அதுவும் அது தப்பான விளம்பரம் கிடையாது. சுத்தமாக வைப்பதற்கான விளம்பரம் தானே அதனால் தைரியமாக நடித்தேன்.
எந்த பொருளையும் நாம் ரெகமெண்ட் செய்து அது தவறான பயன்படுத்தக்கூடியதாக இருக்கக் கூடாது. எல்லார் வீட்டு பாத்ரூம் சுத்தமாக இருந்தால் நல்லது என்ற ஒரு சிந்தனை எனக்கு உண்டு. அந்த நேரத்தில் எனக்கு வந்த வாய்ப்பு உடனே நானும் சரி என்று சொன்னேன். அதனால் எனக்கு கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக கொஞ்சம் வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. அது எனக்கு அப்போதைக்கு தேவையானதாகவும் இருந்தது.
அதுபோல நான் சினிமாவை விட்டு விலகுவதற்கு காரணம் அந்த நேரத்தில் எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் எனக்கே என்னுடைய நடிப்பை பார்த்து போர் அடித்து விட்டது. அப்போ என்னை பார்க்கும் ரசிகர்களுக்கும் போர் அடிக்கும் அதனால் தான் நான் வெளிநாட்டுக்கு குடும்பத்தோடு சென்று விட்டேன். அங்கே பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தேன், மெக்கானிக் செட்டில் வேலை பார்த்து இருக்கிறேன், அது மட்டும் அல்லாமல் கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க்கும் பார்த்து இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
திருமண மற்றும் குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும். ஈகோவை நாம குறைத்துக் கொள்ள வேண்டாம். அப்போதுதான் நம்ம குடும்பம் நல்லபடியாக இருக்கும். நான் நியூசிலாந்தில் இருக்கும் போது கூட சில நேரங்களில் என்னுடைய மகன்களிடம் நான் கொஞ்சம் மாமியார் மாதிரி இருந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நான் செய்த செயலால் என்னுடைய மகன்கள் கூட வீட்டை விட்டு போயிட்டாங்க.
பிறகு தான் நான் புரிந்து கொண்டேன். கணவன் மனைவிக்குள் சில நேரங்களில் கருத்து வேறுபாடு வந்து விவாகரத்து செய்துவிடலாம் என்று தோணும். ஆனால் அப்படி முடிவு எடுத்துவிட்டு இன்னொரு லைப்பில் போகும்போது நம்ம அதிகமாக சாக்ரி பேஸ் பண்ண வேண்டி இருக்கும். அதற்கு இருக்கிற லைப்பில் ஈகோவை குறைத்துக் கொண்டால் போதும் என்று நான் இப்போது மனம் மாறி விட்டேன் என்றும் பேசியிருக்கிறார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
டேய் நம்ம பாண்டியன் படம்ப்பா! தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டு அலறிய கூட்டம்! அந்த 1 சீன் சரித்திர சாதனை -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications