நடிகர் விஷாலோடு சண்டை வர காரணம் இதுதான்.. மனம் திறந்த நடிகர் அப்பாஸ்.. இப்படியும் ஒரு பிரச்சனையா?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து சாக்லேட் பாயாக பலருடைய மனதை கவர்ந்த நடிகர் அப்பாஸ் சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
அத்தோடு குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட அப்பாஸ் அங்கு பெட்ரோல் பேங்கிலும், மெக்கானிக் ஷெட்டிலும், கன்ஸ்ட்ரக்ஷன் வேலையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி இருக்கும் அப்பாஸ் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து அதில் நடந்த பிரச்சனைகள் பற்றியும் சமீபத்தில் பேட்டியில் பேசி இருக்கிறார்.
நடிகர் அப்பாஸ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பைக் ஓட்டுவதில் விருப்பமுள்ளவர் என்றும் பலருக்கும் தெரியும். அதுபோல கிரிக்கெட் ஆர்வம் கொண்டவர் என்று ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். அதிலும் இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் செலபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் அவர் வெளிநாட்டுக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார் என்ற செய்திகள் அப்போது பரவி வந்தது.
இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டியில் நடிகர் அப்பாஸ் பல தகவல்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். அந்த வகையில் செலபிரிட்டி லீக் கிரிக்கெட் விளையாட்டின் போது எனக்கும் விஷாலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அதற்காக வெளிநாட்டிற்கு நான் போகவில்லை. அந்த நேரத்தில் என்னுடைய குடும்ப பிரச்சனை மற்றும் எனக்கு சினிமா வாய்ப்பு கொஞ்சம் குறைய தொடங்கியதும், எனக்கு கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்று தோன்றியது அதனால் தான் நான் வெளிநாட்டிற்கு போனேன்.

ஆனால் அங்கு போவதற்கு முன்பு அந்த சமயத்தில் நான் சில ஈவெண்டுகளை எடுத்து நடத்திக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் சிசிஎல் நடத்துவது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சிசிஎல் நடத்த ஸ்பான்சர் கிடைக்கவில்லை. அதனால் அந்த நேரத்தில் போட்டியை நிறுத்தி விடலாம் என்று திட்டமிட்டு கொண்டிருந்தார்கள்.
அதற்கு நான் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொடங்குங்கள் என்று கூறிவிட்டு பாம்பேயில் சல்மான்கான் இடமும், ஆந்திராவில் நடிகர் வெங்கடேஷிடமும், கர்நாடகாவில் நடிகர் சுதீப்பிடமும் இது பற்றி பேசி பாலிவுட் VS தென்னிந்தியா என்ற அடிப்படையில் முதல் போட்டி நடத்தினேன்.அது மட்டுமல்லாமல் இதனை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்றும் கூறியிருந்தோம்.
இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினார்கள். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இரண்டு முறை சிசிஎல் போட்டியில் நான் பங்கேற்றேன். மூன்றாவது முறை வெளியேறிவிட்டேன். அதற்கு காரணம் விஷால் தான். ஆனால் உண்மையாக அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் யாரோ அவரிடம் என்னை பற்றி தப்பாக சொல்லி அந்த விஷயத்தை அவருடைய தலையில் ஏற்றி வைத்து விட்டார்கள். அதை அவரும் நம்பி என்னை தவறாக புரிந்து கொண்டு மற்றவர்களிடமும் என்னை பற்றி தப்பாகவே பேசினார். அதனால் நான் அதிலிருந்து விலகி விட்டேன். ஆனால் நான் எல்லா மாநில நடிகர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று தான் நினைத்து அதை செய்தேன்.
இந்த பிரச்சனையில் அணியில் சகோதரத்துவம், கலகலப்பு எல்லாம் போய்விட்டது. அதனால் நானும் வெளியேறிவிட்டேன். அதற்கு பிறகு விஷால் இடம் நான் பேசவே இல்லை என்று அப்பாஸ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications