அமிதாப் பச்சன் கேட்ட கேள்விக்கு.. ஷாக் பதிலை கொடுத்த கவுன் பனேகா குரோர்பதி போட்டியாளர்! புரோமோ வைரல்
மும்பை: கவுன் பனேகா குரோர்பதியில் ரூ 1 கோடி வெல்லும் வாய்ப்பை பெற்ற போட்டியாளர் கூறிய ஒரு பதிலை கேட்டு அமிதாப் பச்சன் அதிர்ந்தார்.
சோனி டிவியில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் கவுன் பனேகா குரோர்பதி எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். கிட்டதட்ட 22 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது 14 ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு 20 கேள்விகள் கேட்கப்படும். ஒரு சில கேள்விகள் முடிந்தவுடன் ஒரு உறுதி பணம் இருக்கும். அதை பெற்றுக் கொண்டு நிகழ்ச்சியை போட்டியாளர் முடித்து கொள்ளலாம்.

அடுத்த கேள்வி
இல்லாவிட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம். ஒரு வேளை அடுத்த கேள்வியை தவறாக சொன்னால் அந்த போட்டியாளர் எத்தனை கேள்விகளுக்கு விடை கூறினார்களோ அதற்கு மட்டுமே பணம் கிடைக்கும். ஆரம்பத்தில் ஈஸியாக இருக்கும் கேள்விகள் போக போக கடினமாக இருக்கும். இதற்கு குறிப்பிட்ட கேள்விகளுக்கு ஹெல்ப் லைன்களை பயன்படுத்தி விடையை பெற்று கொள்ளலாம்.

பெங்களூர்
இந்த நிகழ்ச்சியில் பெங்களூரை சேர்ந்த தோல் நோய் மருத்துவர் அனு வர்கீஸ் பங்கேற்றார். அவரது கணவர் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அனு வர்கீஸ் இதுவரை ரூ 75 லட்சம் வென்றுள்ளார். தற்போது ரூ 1 கோடி கேள்விக்காக காத்திருக்கிறார். அந்த தொகையை வென்றாரா இல்லையா என்பது அடுத்த வாரம் தெரியவரும்.

ரூ 50 லட்சம்
இதற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ரூ 50 லட்சம் கேள்விக்கு வென்ற அனுவுக்கு அமிதாப் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் இந்த பரிசுத் தொகையில் உங்கள் கணவருக்கு எவ்வளவு ரூபாய் கொடுப்பீர்கள் என கேட்டார். அதற்கு அனுவோ அப்படியெல்லாம் ரூ 1 கூட தர மாட்டேன் என கூறினார், அரங்கமே சிரித்தது. அமிதாப்பு அதிர்ச்சி அடைந்துவிட்டு சிரித்தார்.

கொரோனா
அமிதாப் பச்சன் கொரோனாவால் இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கவுன் பனேகா குரோர்பதி தொடர்பான படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவரது உடலில் இருந்து நோய் தொற்று நீங்கிய பிறகுதான் படப்பிடிப்பு நடத்த முடியும் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications