சினிமாவில் முதல் “சிறந்த வில்லன்” விருது வாங்கிய நடிகர்.. அதுவும் சரத்குமார் திரைப்படத்துக்கு தான்!
சென்னை: சினிமாவில் சிறந்த கதாநாயகி, சிறந்த கதாநாயகன் என்று ஒவ்வொரு வருடமும் விருதுகள் வழங்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் சினிமாவில் முதல் முறையாக சிறந்த வில்லன் விருது வாங்கிய நடிகர் ஆனந்தராஜ் தானாம். அவர் எந்த படத்திற்காக வாங்கினார் என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
நடிகர் ஆனந்தராஜ் 80ஸ் காலகட்டத்தின் இறுதியில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் 90ஸ் காலகட்டத்திலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் அவர் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் வில்லனாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதற்கு ஆனந்தராஜ் உதாரணம். சினிமாவில் இவர் மிரட்டலான காட்சிகளில் நடித்திருப்பார். இவருடைய நடிப்பு எதார்த்தமாகவே இருக்கும், அதனாலேயே பலரும் திட்டி தீர்த்து வருவார்கள்.

நிஜத்தில் ஹீரோ
ஆனால் நிஜத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு பல குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய பிறந்தநாளில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அங்கு உள்ள குழந்தைகளுக்கு படிப்பதற்கு ஆகும் உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஆனந்தராஜ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சந்தித்த பல பிரச்சனைகள் தான் சாதித்த சாதனை குறித்து பேசி இருந்தார்.
வில்லனின் கேள்வி
அதில் அவர் தன்னுடைய வெற்றி குறித்து பேசும்போது, பொதுவாக ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் கதாநாயகியின், கதாநாயகன் எப்படி முக்கியமோ அதுபோல வில்லன் கேரக்டரும் முக்கியம். வில்லன் இருந்தால் தான் கதாநாயகனின் திறமைகளும் அவருடைய குணமும் வெளியே தெரிய வரும். ஆனாலும் சினிமாவில் தொடர்ந்து வில்லன்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அது எனக்கு வேதனையாக இருந்தது என்று ஆனந்தராஜ் பேசியிருக்கிறார்.
ஆனந்தராஜ் வைத்த கோரிக்கை
அதோடு தான் முதல் முறையாக சிறந்த வில்லன் என்ற விருது வாங்கினேன் அதுவும் கலைஞர் மு கருணாநிதி கைகளில் தான் அந்த விருது வாங்கினேன் என்று அந்த நிகழ்ச்சிக்கு பின்னாடி உள்ள சம்பவம் குறித்தும் ஆனந்தராஜ் பேசியிருந்தார். அதாவது சிறந்த ஹீரோவுக்கு விருது கொடுக்கிறீர்கள், சிறந்த ஹீரோயினிக்கு கொடுக்குறீங்க குணச்சித்திர நடிகர்களுக்கு கொடுக்குறீங்க ஆனால் வில்லன்களுக்கு மட்டும் விருது யாரும் கொடுக்க மாட்டுக்கீங்க என்று நான் அம்மா (ஜெயலலிதா) ஆட்சியில் இருந்தபோது கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தேன்.
முதல் வில்லன் விருது
அதற்குப் பிறகு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி முடிந்து கலைஞர் தலைமையிலான அரசு வந்தது. அந்த சமயத்தில் ஆனந்தராஜ் நடித்த சூரியவம்சம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அப்போது "தமிழ்நாடு அரசின் முதல் சிறந்த வில்லன் விருது" கலைஞர் கையால் ஆனந்தராஜ் தான் வாங்கி இருக்கிறார்.
ரசிகர்களின் ஆதங்கம்
தான் விருது வாங்கியது பற்றி ஆனந்தராஜ் பேசும்போது அது எனக்கு கிடைத்த பெருமையாக நான் நினைக்கிறேன், எனக்கு அந்த அங்கீகாரம் கிடைத்த பிறகு தான் சினிமா உலகில் வில்லன்களையும் கவனிக்க ஆரம்பித்தது என்று அந்த பேட்டியில் ஆனந்தராஜ் பேசியிருக்கிறார். ஆனந்தராஜ் பேட்டியை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதுபோல சினிமாவில் இவரை போல திறமையான பல நடிகர்கள் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது என்று ரசிகர்களும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் ஆனந்தராஜ் மிரட்டலான வில்லன் கேரக்டரில் நடித்து வந்தார் ஆனால் இப்போது அவர் காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் பழையபடி நடிக்க வேண்டும் என்றும் சில ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications