தடபுடலாக நடந்த அர்ஜுன் மகள் திருமணம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. தம்பி ராமையா செய்ததை பாருங்க
சென்னை: நடிகர் அர்ஜூன் மகளான நடிகை ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் இன்று காலை கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது.
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமா பதியை காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு எளிமையாக அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து எங்கேஜ்மென்ட் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் அர்ஜுன் பிஸியாக இருந்ததால் இவர்களுடைய திருமணம் ஜூன் மாதம் நடத்த அப்போது முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி சில வாரங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணத்திற்காக அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தோடு பல பிரபலங்களுக்கும் இன்விடேஷன் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது.
இதில் நடிகர் விஷால் நடிகர், விஜயகுமார், கே எஸ் ரவிக்குமார் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் அறிமுகமானோர் ரிசப்ஷனில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் திருமணத்தில் தம்பி ராமையா காமெடியாக சில ரகளை செய்து கொண்டு இருந்திருக்கிறார். இந்த புகைப்படங்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அர்ஜுனின் மகளின் திருமணம் குறித்து அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. கோலிவுட்டில் பல வருடங்களாக பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அர்ஜுன் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நிலையில் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோஸ்தர் என்ற பல திறமைகளோடு இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் அர்ஜுன் நடிப்பு அதிகமாக பாராட்டப்பட்டது. அதுபோல 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார். ஆனாலும் இவரால் தன்னுடைய தந்தை போல பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. தன்னுடைய திறமையை நிலைநாட்ட அதிக கவனம் செலுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications