திருமண புகைப்படங்களை வெளியிட்ட அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா.. நொடி பொழுதில் நடந்த அதிசயம்
சென்னை: நடிகர் அர்ஜுன் மகளான நடிகை ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் நேற்று அர்ஜுன் தலைமையில் அவர் சொந்தமாக கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஜூன் மாதம் பிறந்தது தான் பிறந்தது சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை எல்லோரும் அடுத்தடுத்து சுப காரியங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பல முன்னணி பிரபலங்கள் நேற்றைய தினம் திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். நடிகர் அர்ஜுனின் மகளுக்கு ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தம்பி ராமையாவின் மகனோடு எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருந்தது.

சில வருடங்களாகவே ஐஸ்வர்யா மற்றும் உமாபதி காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு எளிமையாக இவர்களின் எங்கேஜ்மென்ட் முடிவடைந்தது. அதை தொடர்ந்து அர்ஜுன் மற்றும் உமாபதி வெவ்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ஐஸ்வர்யாவின் திருமணம் சில மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த மாதத்திலிருந்து ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு அர்ஜுன் குடும்பம் மற்றும் தம்பி ராமையாவின் குடும்பம் பல பிரபலங்களுக்கு பத்திரிக்கை கொடுத்து வந்தனர்.
அதோடு இவர்களின் திருமண பத்திரிக்கை சுமார் 5000 ரூபாய் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இப்படியான நிலையில் நேற்று ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு ஒரு சில திரை பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதிலும் இயக்குனர் சமுத்திரக்கனி, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் விஜயகுமார் போன்ற ஒரு சில நடிகர்கள் மட்டும் நேற்றைய தினம் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவர் புகைப்படங்கள் வெளியிட்ட ஒரு சில நொடிகளிலேயே லைக்குகள் எதிர்பார்க்காத வகையில் குவிந்து வருகிறது அதோடு வாழ்த்து மழைகளும் கமாண்டுகளாக நிறைந்து கொண்டிருக்கிறது.

கோலிவுட்டில் பல வருடங்களாக பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அர்ஜுன் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நிலையில் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோஸ்தர் என்ற பல திறமைகளோடு இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் அர்ஜுன் நடிப்பு அதிகமாக பாராட்டப்பட்டது. அதுபோல 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார். ஆனாலும் இவரால் தன்னுடைய தந்தை போல பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. தன்னுடைய திறமையை நிலைநாட்ட அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications