மகளின் காதல் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த போகும் அர்ஜுன்.. பத்திரிக்கையின் விலை இவ்வளவா?
சென்னை: நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் இன்னும் ஒரு சில நாட்களில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கான பத்திரிக்கையை முதலமைச்சரை சந்தித்து இரு வீட்டாரும் கொடுத்திருக்கும் நிலையில் அந்த பத்திரிகையின் விலை இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த வகையில் நடிகர் அர்ஜுனின் மகளின் திருமணம் குறித்து அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. கோலிவுட்டில் பல வருடங்களாக பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அர்ஜுன் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நிலையில் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோஸ்தகர் என்ற பல திறமைகளோடு இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் அர்ஜுன் நடிப்பு அதிகமாக பாராட்டப்பட்டது. அதுபோல 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார்.
ஆனாலும் இவரால் தன்னுடைய தந்தை போல பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. தன்னுடைய திறமையை நிலைநாட்ட அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமா பதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. உமா பதியும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
அதோடு ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமா பதியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது ஐஸ்வர்யாவிற்கும் உமாபதிக்கும் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இருவருடைய வீட்டாரும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். அதை தொடர்ந்து கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் கட்டி இருந்த ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது.

இதில் அவருடைய குடும்ப நண்பர்களும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து இப்போது இவர்களுடைய திருமணம் ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இதனால் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவருமே பிரபலங்களை சந்தித்து திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் என்கேஜ்மென்ட் எளிமையாக முடிவடைந்ததால் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் முடிவு செய்து இருக்கிறார்கள். அர்ஜுனுக்கு சொந்தமாக பல ஏக்கர் பரப்பளவில் இருக்கும் பண்ணை தோட்டத்தில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.
மேலும் இவர்களுடைய திருமண பத்திரிக்கை பாக்ஸ் போன்ற டிசைன் செய்திருக்கிறார்கள். இதில் ஒரு பத்திரிகையின் விலை மட்டும் சுமார் 5000 ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நிச்சயதார்த்தத்தில் தங்கத்தட்டில் விருந்து, சிறப்பு பரிசுகள், மணமகளுக்கும் மணமகனுக்கும் விசேஷ டிசைன் என்று கோடிக்கணக்கில் செலவு செய்திருந்த அர்ஜுன் திருமணத்தை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications