ஜீ தமிழில் என்ட்ரி கொடுக்கும் அர்ஜுன்.. அதுவும் இப்படி ஒரு அவதாரமா? புது முயற்சி
சென்னை: நடிகர் அர்ஜுன் சினிமாக்களில் நடித்திருந்தாலும் சின்ன திரையில் அவர் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஜீ தமிழில் சீரியலில் அவர் அறிமுகமாக போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
பொதுவாக பல நடிகைகள், நடிகர்கள் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தாலும் சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் அங்கேயும் என்ட்ரி கொடுத்து விடுகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் அர்ஜுனும் இணைந்திருக்கிறார். தமிழ் ரசிகர்களால் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படும் அர்ஜுன் கன்னடத்தில் தான் முதலில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். அதற்கு பிறகு தான் தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

அதிலும் அவர் நடிப்பில் வெளியான காக்கி சட்டை, ஜென்டில்மேன், ரிதம், முதல்வன், ஏழுமலை, ஜெய்ஹிந்த் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. தேச உணர்வை ஊட்டி வளர்க்கும் கேரக்டரில் தான் ஆரம்ப காலகட்டத்தில் அர்ஜுன் அதிகமாக நடித்து வந்தார். ஆனால் சமீப காலமாகத்தான் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இறுதியாக அவர் நடிப்பில் வெளியான லியோ படம் அர்ஜுனின் இன்னொரு நடிப்பு முகத்தையும் வெளியே கொண்டு வந்தது.
அது போல அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதிக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் நடிகர் அர்ஜுன் ஜீ தமிழில் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் தான் காதல் ஏற்பட்டது என்று அவர்களே பேட்டியில் கூறியிருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் மீண்டும் அர்ஜுன் கூடிய விரைவில் சீரியலில் களமிறங்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அர்ஜுனுக்கு சர்வைவர் நிகழ்ச்சி பிரபலத்தை கொடுத்ததை தொடர்ந்து சின்ன திரையில் அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் சீரியல் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து இருப்பதாகவும் அந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அர்ஜுன் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும் இந்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications