நடிகர் அர்ஜுன் வீட்டில் கொண்டாட்டம்.. கேக் வெட்டி கொண்டாடிய மகள் ஐஸ்வர்யா.. சந்தோஷத்தில் உமாபதி
சென்னை: நடிகர் அர்ஜுன் மகளான ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் மற்றும் அப்பா, அம்மா குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கலக்கி கொண்டிருக்கிறார். சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் சர்வைவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தார்.

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் அர்ஜுன் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இருந்து பல திரைப்படங்களில் காதலுக்கு சப்போர்ட் செய்யும் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் காதலர்களுக்கு சப்போர்ட் செய்து பலருக்கும் ரோல் மாடலாக மாறி இருக்கிறார்.
தன்னுடைய மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி காதலிக்கிறார் என்ற செய்தியை தெரிந்ததும் இருவருடைய திருமணத்திற்கு சம்மதம் சொல்லி பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி இருந்த அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் தான் உமாபதியும் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது அர்ஜுன் பல இடங்களில் உமாபதிக்கு சப்போர்ட் செய்திருந்தார்.
அதுபோல உமாபதியின் விளையாட்டை அர்ஜுன் பாராட்டி இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவர்தான் தன்னுடைய மருமகனாக வரப்போகிறார் என்பதை அர்ஜூன் எதிர்பார்த்து இருக்க மாட்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு அர்ஜுன் விருந்து வைத்து ஒரு பங்க்ஷன் நடத்தி இருக்கிறார். அதில் அர்ஜுனுடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
திருமண புகைப்படங்களை வெளியிட்ட அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா.. நொடி பொழுதில் நடந்த அதிசயம்
அப்போதுதான் உமாபதியோடு அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு உமாபதி சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்த நிலையில் அர்ஜுன் நடித்து ஹிட்டான ஏழுமலை படத்தில் இரண்டாவது பாகத்தில் உமாபதி நாயகனாக நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இன்று அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கு பிறந்தநாள். அவருடைய குடும்பத்தினர் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது ஐஸ்வர்யாவிற்காக பல கேக்குகளை உமாபதி மற்றும் அர்ஜுன் வாங்கி குவித்திருக்கிறார்கள். அதை ஒவ்வொன்றாக கட் பண்ணிய க்யூட்டான வீடியோவை ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ஐஸ்வர்யாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் அர்ஜுன் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.
அதற்கு பிறகு அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார். ஆனாலும் அவருடைய தந்தை போல இவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. ஆனாலும் கடந்த வருடத்தில் ஐஸ்வர்யா மற்றும் உமாபதிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications