துபாயில் நடைபெற்ற மாரத்தானில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட ஆர்யா.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் ஆர்யா துபாயில் நடைபெற்ற மாரத்தானில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார். அப்போது எடுத்த வீடியோவை ஆர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகர் ஆர்யா பல வருடங்களாக தன்னுடைய நடிப்பு மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். ஆரம்ப கால கட்டத்தில் கதை தேர்வுகளில் கொஞ்சம் சொதப்பினாலும் அதற்குப் பிறகு சரியான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மின்னுகிறார். ஆர்யாவின் உடல் அமைப்பு மற்றும் பேச்சுத் திறமை கூட அவருடைய தனித்தன்மையை ரசிகர்களிடம் தக்க வைத்திருக்கிறது.

ஆர்யா தீவிரமான உடற்பயிற்சி விரும்புபவர். அதனாலேயே தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அதிகமாக தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய நண்பர்களிடம் கூட இதுபோல உடற்பயிற்சி செய்ய சொல்லி தொந்தரவு செய்வதாக நடிகர் சந்தானம் கலகலப்பாக பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த ஆர்யாவிற்கு சார்பட்டா திரைப்படம் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதுபோல ராஜா ராணி, நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமாக தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆர்யா விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் துபாயில் மாரத்தான் போட்டி நடைபெற்றிருக்கிறது. அதில் தமிழகம் சார்பில் ஆர்யா கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யா பகிர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு அதிகமான லைக்குகள் மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications