ஜீ தமிழில் திடீரென முடிவுக்கு வரும் டாப் சீரியல்.. கதாநாயகன் வெளியிட்ட போஸ்ட்.. இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவுக்கு வருவதாக அந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் ஆரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனாலும் இந்த சீரியலில் அடுத்தடுத்து பல நடிகைகள் விலகி விட்டனர். அதிலும் இந்த சீரியலின் கதாநாயகி சக்தி கேரக்டரில் நடித்த மோஷிதா பாய் தான் திடீரென்று விலகுவதாக பதிவு வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.

Television Meenakshi Ponnunga serial

அம்மா மற்றும் மகள்களின் கதையை மையப்படுத்திய இந்த சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகையும் திடீரென்று விலகி இருந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் அம்மா மீனாட்சி கேரக்டரில் அர்ச்சனா நடித்து வந்தார். ஆனால் அவர் சீரியலில் இருந்து விலகிய பிறகு அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீ ரஞ்சனி நடித்து வருகிறார்.

சக்தி மற்றும் வெற்றியின் காதல் மற்றும் மோதல் தான் இந்த சீரியலில் மேலும் சுவாரஸ்யம் ஏற்படுகிறது. இவர்கள் இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். வெற்றி கேரக்டரில் நடிகர் ஷபானாவின் கணவர் தான் நடித்து வருகிறார். ஷபானா ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஆரியன் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்‌.

அப்போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிறகு கல்யாணமும் முடிந்தது ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஆரியன் விலகி இருந்தார். அதற்கு பிறகு தான் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஆரியனுக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் நேற்று தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

Television Meenakshi Ponnunga serial

அப்போது ரசிகர்கள் அவரிடம் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவுக்கு வருகிறதா அண்ணா என்று கேட்க அதற்கு ஆமாம் என்று பதில் கொடுத்திருக்கிறார். அதுபோல மீனாட்சி பொண்ணுங்க சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது, இன்னொரு பெரிய நிகழ்ச்சியில் நான் உங்களை சந்திக்கிறேன் என்று ஆரியன் தெரிவித்திருக்கிறார்.

Television Meenakshi Ponnunga serial

ஆரம்பத்தில் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பிரைன் டைமில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் அதற்கு பிறகு திடீரென்று அந்த சீரியல் மாலை 6:00 மணிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் டிஆர்பி குறைய தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+