அதெல்லாம் உண்மை இல்லை.. தன்னை பற்றி பரவி வந்த வதந்திக்கு விளக்கம் கொடுத்த அசீம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அசீம் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டில் வின்னர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அசீம் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் பரவி வந்தது. அது குறித்து இப்போது அசீம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அங்கு விமர்சனங்களும் பிரச்சனைகளும் பஞ்சமில்லாமல் தான் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் யார் அதிகமாக பரபரப்பு ஏற்படுத்தி கன்டென்ட் கொடுத்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அதிக நாட்கள் இருந்து வருவார்கள். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் சாதனை படைக்கும் வகையில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து கடைசி வரைக்கும் பெரும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டு இருந்த போட்டியாளர் என்றால் அது அசீம் தான்.

Television Bigg Boss Azeem

அவர் ஆறாவது சீசனில் போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்பு அவர் விஜய் டிவி மற்றும் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் முதல் முதலாக வாணி போஜனோடு சேர்ந்து மாயா என்ற சீரியலில் தான் அறிமுகம் ஆகி இருந்தார். அந்த சீரியலுக்கு பிறகு பிரியமானவளே பிரிவோம் சந்திப்போம், தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, ஜோடி நம்பர் ஒன், பூவே உனக்காக போன்ற பல சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருந்தார்.

பாக்கியலட்சுமி: கோபியிடம் பிரின்ஸ்பல் கேட்ட கேள்வி.. கொந்தளித்த ராதிகா.. ஈஸ்வரி இப்படி பேசிட்டாங்களே
அதற்குப் பிறகுதான் அசீம் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பெரிய அளவில் அந்த நேரத்தில் விமர்சனங்களை பெற்று வந்தது ஆனாலும் அதை எல்லாம் அசீம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகின்ற நேரத்தில் இவர் மீண்டும் சீரியலில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் இப்போது பரவி வந்தது.

இரண்டு நாட்களாக அசீம் விஜய் டிவியில் புதிய சீரியலில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் பரவி வந்தது அதற்கு அசீம் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்‌ அதே நேரத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் அது நடக்கவில்லையே என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இப்போது அந்த தகவலை அசீம் மறுத்து இருக்கிறார்.

என் வயிற்றில் தலைகாணியை வச்சு.. பேசும்போதே அழுத பெண்.. தலை குனிந்த ஆரி.. வா தமிழா வாவில் நெகிழ்ச்சி
இது பற்றிய அசீம் கொடுத்த விளக்கத்தில் நான் சீரியலில் மீண்டும் நடிக்கும் ஐடியா எனக்கு சுத்தமா இல்லை. சீரியலில் நான் நடிப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. நான் திரைப்படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். நான் நடித்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்னும் இரண்டு படங்களிலும் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எனவே சீரியல் பக்கம் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+